Categories: latest news

குபேரா படத்தின் மைனஸ்கள் என்ன?!. இது மட்டும் செஞ்சிருந்தா!.. லிஸ்ட் போடும் பிரபலம்!

குபேரா படத்தை முதலில் மூன்றரை மணி நேரமாக எடுத்து வைத்து இருந்தாங்களாம். அப்புறம் அதை ட்ரிம் பண்ணி 3 மணி நேரத்துக்குக் குறைத்துள்ளார்கள். இப்போ படம் எப்படி இருக்குன்னு அதைப் பார்த்த பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களைச் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

தனுஷ் தான் இந்தப் படத்தோட கதையை ஒற்றை ஆளா சுமக்கிறார். ஒரே நேர்க்கோட்டுல போற பிச்சைக்காரன் கதை தான் குபேரா. அப்படின்னா ஒரு கிளைக்கதையைச் சொல்லணும்.

ஆனா அது எதையுமே சொல்லாம பிச்சைக்காரன், கோடீஸ்வரன், சிபிஐ அதிகாரின்னு மாத்தி மாத்திப் போகுது. இதுக்கு இடையில ராஷ்மிகா மந்தனா. அந்தக் கேரக்டர் எல்லாம் ஒட்டுதலே இல்ல. வலுவான காரணம் சொல்லணும். பிச்சைக்காரனுக்கு வலி ஏற்படுத்துற மாதிரி சீன் வருதுன்னா ஆடியன்ஸ் அலறணும்.

ஆனா இதெல்லாம் வரப்போகுதுன்னு தெரியுது. பல சீன்கள் அப்படியே ஓடிக்கிட்டே இருக்கு. ஒரு கட்டத்துக்குப் பிறகு முடிச்சிடுங்க. வேண்டாம். விட்டுருங்கன்னு சொல்ல வைக்கிறாங்க.

ஆடியன்ஸ்சும் பார்த்துக்கிட்டே இருக்குறோம். எதுக்குன்னு ஒரு கேள்வி எழுது. 3 மணி நேரம் 2 நிமிஷம் ஓடுற இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்தக் கால நேர விரயம் ஒரு கட்டத்துல சோர்வைக் கொடுக்குது. ப்ளஸே இல்லையான்னு கேட்கலாம். முதல் பாதியில் அவ்வளவு அருமையா கதையைக் கொண்டு போனாங்க.

அடுத்த பாதியில் நாலைஞ்சு சீன் திருப்புமுனையா வச்சு ஒரு கிரிஸ்பா டக்குன்னு அந்தக் கதையை எண்டு கார்டு போட்டு முடிச்சிருக்கணும். எதுக்கு இந்தப் படத்தை ஆடியன்ஸ் ஃபீல் பண்ணனும்னு வளர்த்துருக்காற்களான்னு தெரியல. இல்ல நடிப்பு அரக்கன் தனுஷ் கிடைச்சிட்டாரு.

இவருக்கிட்ட இருந்து நடிப்பை உறிஞ்சி எடுக்கணும்னு சேகர் கம்முலா நினைச்சாரான்னு தெரியல. அவர் பிரபலமான தெலுங்கு டைரக்டர். இதுவே ஒரு புது டைரக்டர் இவ்ளோ பெரிய கதையைச் சொன்னா மாஸ் ஹீரோக்கள் ஒத்துக்குவாங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் செய்யாறு பாலு.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago