Categories: latest news

தனுஷோடு போட்டி போட்ட அதர்வா!.. DNA முதல் நாள் வசூல் என்ன?…

DNA collection: தனுஷின் குபேரா மற்றும் அதர்வாவின் DNA ஆகிய இரண்டு படங்களும் நேற்று வெளியானது. இதில், குபேராவில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பெரிய நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியிருந்தார். ஒரு கார்ப்பரேட் முதலாளி தனது கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்காக ஒரு விஷயம் செய்கிறார்.

நேர்மையாக இருந்ததாலேயே சிறைக்கு போன சிபிஐ அதிகாரி நாகார்ஜுனாவுக்கு விடுதலை கொடுப்பதாக சொல்லி அவரை வைத்து காயை நகர்த்துகிறார்கள். 4 பிச்சைக்காரர்களை பினாமியாக போட்டு அவர்களின் பெயரில் செல்போன் நிறுவனம் துவங்கி வேலைகள் நடக்கிறது. அதில் ஒரு பிச்சைக்காரராக தனுஷ் வருகிறார். தனுஷுக்கு உண்மை தெரியவர அவர் தப்பித்துவிடுகிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

கதை, தனுஷின் நடிப்பு ஆகியவை நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சொன்னாலும் படத்தின் இரண்டாம் பாகம், 3 மணி நேர நீளம், கிளைமேக்ஸ் ஆகியவை நன்றாக இல்லை என்கிற விமர்சனமும் படத்தின் மீது எழுந்திருக்கிறது. அதேநேரம், அதர்வாவின் நடிப்பில் உருவாகியுள்ள DNA படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

இந்த படத்தை ஒரு நாள் ஒரு கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். குடும்ப பின்னணியில் நடக்கும் கதையில் திரில்லர் கலந்து DNA படத்தை கொடுத்திருக்கிறார். நேற்று காலை முதலே இப்படத்தை பலரும் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதர்வாவுக்கு DNA படம் நல்ல கம்பேக்காக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குடும்பத்தோடு சென்று படத்தை பார்க்கலாம். அதர்வாவின் மனைவியாக வரும் நிமிஷா விஜயனும் சிறப்பாக நடித்திருக்கிறார் என கருத்துக்கள் வந்தது.

மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றுவது உள்ளிட்ட பகீர் குற்றங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், DNA படம் முதல்நாளில் 40 லட்சத்தை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் போகப்போக வசூல் அதிகரிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago