Categories: latest news

குபேரா Vs DNA!.. உசுர கொடுத்து நடிச்சும் யூஸ் இல்லயே!.. அசால்ட்டா ஸ்கோர் பண்ணிய அதர்வா!

Kubera Vs DNA: ஜூன் 20ம் தேதியான இன்று தனுஷின் குபேரா மற்றும் அதர்வாவின் DNA ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இதில், குபேரா படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் தனுஷ், நாகர்ஜுனா போன்ற பெரிய நடிகர்கள் அதில் இருக்கிறார்கள். அதோடு, அதிக பட்ஜெட், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் ரிலீஸ், பெரிய அளவில் புரமோஷன் என ஹைப் ஏற்றினார்கள். புரமோஷன் விழாவில் தனுஷ் பன்ச் வசனமெல்லாம் பேசினார்.

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு பிராஜெக்டை பெறுவதற்காக பிச்சைக்காரர்கள் சிலரை பினாமியாக்கி பணம் கைக்கு வந்ததும் அவர்களை கொலை செய்ய திட்டமிடுகிறார் ஒரு கார்ப்பரேட் வில்லன். இது தெரியாமல் அவருக்கு உதவ வருகிறார் நாகர்ஜுனா. அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிச்சைக்காரர்களில் தனுஷும் சிக்க உயிருக்கு பயந்து அவர் ஓடும் ஓட்டம்தான் குபேரா.

இந்த படத்தில் தனுஷ் பல இடங்களில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து வாழ்ந்து காட்டியிருக்கிறார். படத்தின் முதல் பாதி நன்றாகவே போகிறது. நல்ல கதை. நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஆனால், படத்தில் நிறைய மைனஸ் இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் சொதப்பி இருக்கிறார்கள். மேலும், இயல்பாக கதை நகரும்போது ஃப்ரி கிளைமேக்ஸ் மற்றும் கிளைமேக்ஸில் உள்ள செயற்கைத்தனம் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் முடிவு சரியாக அமைக்கப்படவில்லை. அதோடு, படத்தின் 3 மணி நேர நீளமும் ரசிகர்களை சோதிக்கிறது. அதோடு இயக்குனர் தெலுங்கு என்பதால் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல ஒரு உணர்வு வருகிறது. ஆனால், இந்த படத்தோடு வெளியாகியுள்ள DNA படம் நல்ல பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது நேரடியான தமிழ்படம். இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை.

இந்த படத்தை ஒரு நாள் ஒரு கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கணவன் மனைவிக்குள் இருக்கும் அழகான உறவு மற்றும் அதோடு திரில்லர் கலந்து இப்படத்தை கொடுத்திருக்கிறார். இந்த படம் நன்றாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். அதர்வாவுக்கு இது ஒரு செம கம்பேக் எனவும், செமையாக நடித்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக குடும்பத்தோடு பார்க்க வேண்டும், பெண்களுடன் ஆண்களும் தியேட்டருக்கு சென்று இப்படத்தை பார்க்கவேண்டும் எனவும் பலரும் சொல்லி வருகிறார்கள். இப்படத்தில் நடித்துள்ள நிமிஷாவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அதோடு, துவக்கம் முதல் இறுதி வரை படம் எங்கும் போரடிக்கவில்லை. கதை, திரைக்கதை நேர்த்தியாக இருக்கிறது. எல்லோரின் நடிப்பும் அபாரமாக இருக்கிறது. கிப்ரானின் இசையும் பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். குபேரா படம் போல சில நெகட்டிவான விமர்சனங்களை DNA படம் பெறவில்லை என்பதுதான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களுக்கும் வந்திருக்கும் விமர்சனங்களை பார்க்கும்போது தமிழகத்தில் குபேராவை விடவும் DNA படம் அதிக வசூலை பெற்றாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago