அதர்வாவுக்கு கம்பேக் கொடுக்குமா டிஎன்ஏ.? ஆக்ஷன் காட்சிகள்ல தெறிக்க விட்டுருக்காங்களே..!

Published on: August 8, 2025
---Advertisement---

முரளியின் மகன் அதர்வா நடித்து வரும் படம் டிஎன்ஏ. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இது எப்படி இருக்கிறது? ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா என்று பார்க்கலாம்.

ஜிப்ஸி, டாடா படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் டிஎன்ஏ படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் மான்ஸ்டர், ஒருநாள் கூத்து ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை பார்த்திபன் கவனித்துள்ளார். அதர்வாவுடன் இணைந்து பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேட்;டன், சுப்ரமணியம் சிவா, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

அதர்வாவுக்கு பரதேசி படத்துக்கு அப்புறம் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் படமும் வரவில்லை. பூமராங், குருதி ஆட்டம், நிறங்கள் மூன்று என வரிசையாக தோல்விப்படங்கள் தான். அந்த வகையில் டிஎன்ஏ படம் கைகொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வரும் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அந்த வகையில் டிஎன்ஏ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த டிரெய்லர் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா…

தாய் சேய் நல விடுதி சாபம், காயின், பெட்டர் என அனைத்து விஷயங்களும் இரு பக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதாக படத்தில் காட்சிகள் காட்டப்படுகின்றன. மனைவியின் மனநல பாதிப்பு பற்றிய பிரச்சனைகளால் வரும் விளைவுகள், அதை அதர்வா கையாளும் விதம் என படத்தின் டிரெய்லரே சீட்டின் நுனியில் நம்மை உட்கார வைக்கிறது.

பரபர ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. சீரியஸா மென்டல் இல்நஸ் இருந்ததான்னு கேட்குறாங்க. அதற்கு கல்யாணத்துக்குப் பிறகு இருந்ததுன்னு சொல்கிறார் அதர்வா. படத்தில் அதர்வாவின் மனைவியாக வரும் கதாநாயகி நிமிஷா சாஜயன் ஒரு கைக்குழந்தையுடன் நம்மைக் கலங்கடிக்கிறார்.

டிஎன்ஏ ட்ரைலர் லிங்க் இதோ:

https://www.youtube.com/watch?v=edb1pY9BoVg

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment