1. Home
  2. Latest News

கம்பேக் கொடுத்தாரா? இல்ல கழுத்த அறுத்தாரா?.. GVM-இன் டோமினிக் விமர்சனம் இதோ!..


Gautham Menon: தமிழ் சினிமாவில் கிளாசிக் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் கௌதம் மேனன். மின்னலே என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய கௌதம் மேனன் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார். இவரின் திரைப்படங்கள் அனைத்துமே பீல் குட் மூவியாக இருக்கும்.

இவரின் இயக்கத்தில் வெளியான காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. தொடர்ந்து இயக்குனராக வளம் வரும் கௌதம் மேனன் சமீப நாட்களாக மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.


தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் இவர் கடைசியாக இயக்கிய ஜோஷ்வா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது வரை ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் மலையாள சினிமாவில் நடிகர் மம்மூட்டியை வைத்து டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார்.

இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் கால் பதித்திருக்கின்றார் இயக்குனர் கௌதம் மேனன். சமீப நாட்களாக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு கௌதம் மேனன் பேட்டி கொடுத்து வந்தார். அதில் இந்த திரைப்படம் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவர் கொடுத்த பில்டப்புக்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றதா? அல்லது சொதப்பி இருக்கின்றதா? என்பதை ரசிகர்கள் தொடர்ந்து தங்களது twitter பக்கத்தில் விமர்சனங்களாக பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திரைப்படம் குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். இந்த திரைப்படம் ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் படமாக உருவாகி இருக்கின்றது. தற்போது வரை படம் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் லைட் ஹார்ட் படமாக உருவாகி இருக்கின்றது. இரண்டாம் பாதி சுவாரசியமாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். படம் ஆரம்பம் முதலில் ஸ்லோவாக இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த திரைப்படம் செட்டாகுமா? என்பது சந்தேகம் தான்.




ஆனால் கௌதம் மேனன் ஸ்டைலில் இந்த திரைப்படம் இருக்கின்றது. படத்தின் கிளைமாக்ஸ் வேற லெவலில் இருக்கின்றது என படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனாலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கூறும் ஒரே விஷயம் படம் சற்று ஸ்லோவாக இருப்பது தான். மேலும் மம்முட்டியின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கின்றது. சில இடங்களில் காமெடி நன்றாக ஒர்க் அவுட்டாகி இருக்கின்றது.



நடிகர் மம்முட்டியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. தற்போது வரை படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்து வரும் நாட்கள் வார இறுதி நாட்கள் என்பதால் படம் எப்படிப்பட்ட வரவேற்பை பெறுகின்றது என்பதை பொறுத்து தான் இப்படம் வெற்றி படமா? இல்லையே தோல்வி படமா? என்பதை முடிவு செய்ய முடியும்.




இருந்தாலும் பலர் திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும்போது தூக்கம் வருகின்றது என்று சிலர் கூறியிருக்கிறார்கள். மேலும் நீங்கள் மலையாள சினிமா பக்கம் இனிமே வர வேண்டாம், தமிழ் சினிமாவில் இருந்து கொள்ளுங்கள் என்றெல்லாம் தொடர்ந்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.