Categories: latest news

தனுஷுக்கு தேசிய விருது கன்ஃபார்ம்!.. குபேரா படம் டிவிட்டர் விமர்சனம்!..

Kubera Review: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் குபேரா. தமிழகத்தில் இப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானாலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் காலை 6.30 மணிக்கு வெளியானது. வெளிநாடுகளில் பிரீமியர் ஷோ என சொல்லப்படும் முதல் காட்சி முடிந்துவிட்டது. எனவே, படம் பார்த்தவர்கள் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் படம் எப்படி இருக்கிறது என பதிவிட்டு வருகிறார்கள்.

குபேரா படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்களே வருகிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். ‘படத்தின் கடைசி 10 நிமிட காட்சி சிறப்பாக இருந்தது. சேகர் கம்முலா எழுதியுள்ள இந்த கதைக்கு எப்படி கிளைமேக்ஸ் அமையும் என பதட்டமாக இருந்தது. ஏனெனில் கொஞ்சம் தப்பினாலும் சொதப்பிவிடும் ரிஸ்க் இருந்தது. ஆனால், அவர் அதை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

இந்த படம் ஒரு எமோஷனல் ரோலர்கோஷ்டர். இது உங்கள் இதயத்தை இடித்து நீடித்து நிற்கும். தனுஷின் நடிப்பு உங்கள் மனதில் நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தும். நாகார்ஜுனாவும், ராஷ்மிகாவும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 2025ம் வருடம் நான் பார்த்த சிறந்த படம் இது’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

‘தேசிய விருது சரியாக கொடுக்கப்பட்டால் அது தனுஷுக்காக கொடுக்கப்பட வேண்டும். என்னமாதிரியான நடிகர் இவர்!..’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். ‘லவ் ஸ்டோரி படத்திற்கு பின் சேகர் கம்முலா கொடுத்திருக்கும் சிறப்பான திரைப்படம் இது. ஆழமான கதையை வைத்து மனதை பாதிக்கும் சினிமாவை கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இப்படம் பிளாக்பஸ்டர் அடிக்கும்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

‘என்ன எக்ஸ்பிரசன்.. ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் வாழ்கிறார்.. அவரின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனுஷ் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பரிசு’ என ஒருவர் ஃபீல் செய்து பதிவிட்டிருக்கிறார். அதேநேரம், தியேட்டரில் படம் பார்ப்பவர்களின் விமர்சனம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே படத்தின் வெற்றி அமையும். அது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

வெளிநாடுகளில் தெலுங்கு படங்களுக்கு நல்ல வரவேற்பு எப்போதும் இருக்கும். அதுபோல குபேராவுக்கும் நிறைய டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago