Categories: latest news

குடும்பஸ்தனா வெற்றி பெற்றாரா நடிகர் மணிகண்டன்… எப்படி இருக்கு படம்.. முழு விமர்சனம் இதோ..!

நடிகர் மணிகண்டன்: நடிகர் சிவகார்த்திகேயனை போலவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் மணிகண்டன். பின்னர் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பல படங்களில் டப்பிங் பேசி இருக்கின்றார். பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டனுக்கு இயக்குனராக வேண்டும் என்பது கனவு. ஆனால் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்து வந்தார்.

அந்த வகையில் காலா, விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர் அதன் பிறகு ஜெய்பீம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. ராஜாகண்ணு என்கின்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

இந்த திரைப்படத்திற்குப் பிறகு குட் நைட் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு லவ்வர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு கொடுக்க இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

குடும்பஸ்தன் கதை: குடும்பஸ்தன் திரைப்படத்தில் நவீன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பையனாக நடித்திருக்கின்றார் மணிகண்டன். இவர் ஆதிதிராவிட பெண்ணான வெண்ணிலாவை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றார். திருமணத்திற்கு பிறகு வேலை போய் விடுகின்றது.

இதற்கிடையில் வெண்ணிலாவுக்கு ஐஏஎஸ் கனவுடன் இருந்து வரும் நிலையில் திருமணம் முடிந்த சந்தோஷத்தில் கர்ப்பமாகி விடுகின்றார். வேறு வழியில்லாமல் குடும்பத்தை நடத்துவதற்கு கடன் வாங்க தொடங்கி அதன் பிறகு என்னென்ன பிரச்சனைகள் வருகின்றது? அதனை மணிகண்டன் எப்படி சமாளிக்கின்றார்? என்பதை கதையாக எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் விமர்சனம் : இன்றைய கால இளைஞர்களை மையப்படுத்தி அதிலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் திருமணத்திற்கு பிறகு தினம் தினம் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், இன்றைய காலத்தில் வாழ்க்கையை ஓட்டுவதற்கு கடன்களை வாங்கி அதை சமாளிக்கும் படமாக இந்த படம் அமைந்திருக்கின்றது.

காசு இல்லாதவனை இந்த உலகம் மிகக் கேவலமாக நினைக்கும் என்பதை மிகச் சிறப்பாக இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து கடன் தொல்லையால் சிக்கிக் கொள்ளும் மணிகண்டன் கிளைமாக்ஸில் என்ன ஆகிறார் என்பதை மிகச் சீரியஸாக அதே சமயம் காமெடியாக கொண்டு சென்று இருக்கின்றார் இயக்குனர்.

படத்தின் பிளஸ் பாயிண்ட்: பாட்டில் சுந்தரம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக இருந்தது. அதே சமயம் நடிகர் மணிகண்டனின் நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார்கள். பல இடங்களில் நகைச்சுவை மிகச் சிறப்பாக ஒர்க் அவுட்டாகி இருக்கின்றது.

படத்தின் மைனஸ் : படத்தின் ஆரம்பம் சற்று ஸ்லோவாக இருக்கின்றது. சில இடங்களில் தொடர்ச்சியாக பேசும் வசனங்கள் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்கின்றது. குடும்பத் திரைப்படம் என்பதால் இளைஞர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இதில் இல்லை. குடும்பமாக சென்று பார்ப்பதற்கு இந்த திரைப்படம் ஏற்ற திரைப்படமாக இருக்கின்றது. அறிமுக இயக்குனராக தன்னால் முடிந்த அளவுக்கு படத்தை இயக்கி இருக்கின்றார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

5 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

6 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago