1. Home
  2. Latest News

NEEK தேறுமா, தேறாதா? எப்போ பார்த்தாலும் சரக்கா அடிக்கிறாங்கப்பா!


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) படத்தின் பிரிமியர் ஷோவை சத்யம் தியேட்டரில் நேற்று பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பார்த்துள்ளார்.

தனுஷ்: தனுஷ் இயக்கத்தில் இது 3வது படம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போ அது வேணாம். தனுஷோட அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகி உள்ளார். அவருடன் இணைந்து மேத்யு தாமஸ், பிரியா வாரியர், அனிகா, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை என்னன்னா தான் கட்டிக்கிற பொண்ணுக்கிட்ட போய் தன்னோட லவ் பெய்லியரை சொல்ற ஹீரோவின் கதை.

பவிஷ்: இன்றைய 2 கே கிட்ஸை மனசுல வச்சி படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். அவரைப் போலவே இருக்கிறார் அவரது அக்கா மகன் பவிஷ். படத்தின் பெரிய பலமே அவர்தான். இந்தப் படத்தின் கேரக்டர்களுக்காக நடிகர்களை சிறப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளார் தனுஷ்.

இது ஜாலியான படம். 85 சதவீதம் இளைஞர்கள்தான் தியேட்டர்ல இருக்காங்க. படத்தைக் கொண்டாடிட்டாங்க. இது வழக்கமான காதல் கதைதான். ரொம்ப எதிர்பார்க்காதீங்கன்னு தான் கார்டு போடுறாரு தனுஷ். படத்துல என்ன குறைன்னு பார்க்கலாம். ஆனா அதையும் தாண்டி படத்துல நிறைகள் இருக்கு.


மேத்யு தாமஸ்: இன்றைய காலத்துல இவங்களைத் தான் தியேட்டருக்கு வரவழைக்கணும்னு அந்த சூட்சமத்தைக் கண்டுபிடித்துள்ளார் தனுஷ். லியோவுல விஜய்க்குத் தம்பியாக வந்தவர் மேத்யு தாமஸ். இவரும் வேற லெவலில் செம மாஸாக நடித்துள்ளார். படத்துல எல்லாருக்கிட்டேயும் அருமையா வேலை வாங்கிருக்காரு தனுஷ்.

அனிகாவும் மேனரிசத்தில் கலக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷின் ரீ ரிக்கார்டிங் அருமை. அவர் நடிப்புல கவனம் செலுத்துறதை விட மியூசிக்ல கவனம் செலுத்தலாம். எமோஷனல் சொல்ற இடம் சூப்பரா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. அப்பா பொண்ணுக்கு இடையே நடக்குற அந்த சீன்தான். சரத்குமார் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

ஜிவி பிரகாஷ்: செகண்ட் ஆஃப் கோவாவுக்குப் போகுது. 5 பேருதான் கதைக்குள் வர்றாங்க. ஒளிப்பதிவு அருமை. 2மணி நேரம்தான் படம். ஜிவி பிரகாஷ் கேமியோ ரோல். ஒரு பாட்டுக்கு நிற்கிறார். அனிகா, சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சி வரும்போது தான் படம் டேக் ஆப் ஆகுது. 60 வயசுக்கு மேல உள்ளவங்க பார்த்தா நெகிழ்ந்து போயிடுவாங்க.

படத்தோட ஆரம்பத்துல இருந்து முடியற வரைக்கும் சரக்கா அடிக்கிறாங்க. 5 நாளும் கல்யாண பங்ஷன் நடக்கும். ஒரே சரக்குதான். இதுதான் குறை. இது யூத்துக்கான கொண்டாட்டமான படம்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.