ஒத்த ஓட்டு முத்தையா.... எப்படி இருக்கு? உண்மையைச் சொல்றாங்க படம் பார்த்தவங்க..!

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தைப் பார்த்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா...
தில்லு முல்லு: மக்களுக்கு நல்ல மெசேஜ் சொல்லுது படம். ஆண்ட கட்சி. ஆண்டுகிட்டு இருக்குற கட்சியைச் சொல்றாங்க. நல்ல கருத்து இருக்கு. எல்லா அரசியலக்கும் பொதுவாகவே சொல்றாங்க. தில்லு முல்லு எப்படி எப்படி பண்றாங்கன்னு தெளிவா சொல்றாங்க. மிகப் பெரிய விழிப்புணர்வு.
இந்த அரசியல்: தமிழ்நாட்டுல நடக்குற அரசியலை உண்மைச் சம்பவத்தைத் தெளிவா சொல்றாங்க. தமிழக அரசு எந்த நிலைமைக்குப் போய்க்கிட்டு இருக்கு? இந்த அரசியல் ஆட்சி மக்களுக்கு உரிய அரசா இருக்கணும்னு எடுத்துருக்காங்க.
இதைப் பார்த்து திருந்தணும்: நீண்ட நாளைக்கு அப்புறம் கவுண்டமணியோட நடிப்பு, அரசியல், காமெடி சிறப்பா இருக்கு. யோகிபாபு காமெடியும் நல்லாருந்தது. இன்று நாட்டுல நடக்குற அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய படம். மக்களும் இதைப் பார்த்து திருந்தணும். எப்படி எல்லாம் மக்கள் ஓட்டுப் போடுறாங்க? எப்படி அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்குறாங்க?
விழிப்புணர்வு படம்: தமிழக அரசியல்ல மக்களை எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கங்கறதைத் தெளிவா சொல்லி இருக்காங்க. இன்னைக்கு உள்ள சூழல்ல மிகப்பெரிய விழிப்புணர்வு படம். சமகால அரசியலைச் சொல்லிருக்காங்க. சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், கல்வி வேணும் என்பதைக் கொண்டு போய்ச் சேர்க்கணும். அதைச் சொல்லிருக்காங்க.
300, 400 கோடில எடுத்து வர்ற படங்கள் எல்லாம் பிளாப் ஆகுது. மதகஜராஜா வெற்றி ஆச்சு. அந்த மாதிரி இன்னைக்கு இருக்குற அரசியலை சூப்பரா காட்டிருக்காங்க. கோமாளி அரசியலைத் தோலுரிச்சிக் காட்டிருக்காங்க.
அரசியல் காமெடி: 90ஸ் கிட்ஸ்ல பார்த்து ரசிச்ச எல்லா காமெடி நடிகர்களும் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. பேமிலியோட பார்க்கலாம். நீண்ட நாளுக்கு அப்புறம் வந்துருக்குற அரசியல் காமெடி என்டர்டெயின்மென்ட் படம். படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் போறதே தெரியல.
படத்தை குடும்பத்தோடு வந்துக் கொண்டாடலாம். மதுரை குமார் கலக்கு கலக்குன்னு கலக்கிருக்காரு. ஆனந்த்பாபு பையன், மயில்சாமி பையன், நாகேஷ் பேரன் எல்லாம் நடிச்சிருக்காங்க. ரொம்ப நல்லாருந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.