A… படம்… ஆனா விரசமில்லை… இப்படியா சொல்வீங்க..? பெருசு படம் பார்த்து கொந்தளித்த பிரபலம்

Published on: March 18, 2025
---Advertisement---

பெருசு படம் நேற்று வெளியாகி ரசிகர்களைக் குதூகலப்படுத்தியது. A படம். ஆனா விரசமில்லை. இதுதான் படத்திற்கான விளம்பரம் ஆகிவிட்டது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.

அடல்ட் கன்டன்ட். விரசமே இல்லாம குடும்பத்தோடு பார்க்கலாம்னு சொல்லி விளம்பரப்படுத்துறாங்க. 8 வருஷத்துக்கு முன்னால நடந்த ஒரு உண்மைச் சம்பவம். ஸ்டார் ஓட்டலுக்கு வந்த தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒருவர் அங்கு தங்கி உள்ள ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள ஒரு ஸ்பிரேயை வாங்கி அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி விட்டாராம்.

அதன்பிறகு வீரியம் அதிகமாகி அவருக்கு பிரஷரும் அதிகமாகி பயத்தை உண்டாக்கி விட்டது. நண்பர்களிடம் இதுபற்றி அவர் போனில் தொடர்பு கொண்டபோது உயிரா, மானமா எது முக்கியம்? இந்த இடத்தில் மானத்தை விட உயிரே முக்கியம். பக்கத்துல உள்ள மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகலாம்னு சொல்லி அவரை ஒரு துணியால் சுற்றிக் கொண்டு வந்து சிகிச்சை அளித்தார்களாம்.

இது அப்போது பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். கிட்டத்தட்ட அதே கதை தான் பெருசு படத்திலும் உள்ளது. இதைப் போய் விரசம் இல்ல. குடும்பத்தோடு பார்க்கலாம்னு சொல்றாங்களே என கொந்தளிக்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

இதுல கொடுமையான விஷயம் என்னன்னா சிங்களத்துல இருந்து ரீமேக் செய்யப்பட்ட படம் இது. அங்கு சூப்பர்ஹிட் ஆன படமாம். அவங்க ரசனையைத் தூக்கி ரசத்துல போட. படத்துல பெரியவர் ஒருவர் ஏடாகூடமான வேலையைச் செஞ்சிட்டு டிவியைப் பார்க்குறாரு. திடீர்னு செத்துப் போயிடுறாரு.

அவரு பாடியைப் பார்க்கும்போது தான் அந்த வெட்கக்கேடான விஷயம் தெரியுது. அப்புறம் பாடியை எப்படியா அடக்கம் பண்றதுன்னு அந்தக் குடும்பத்துல உள்ளவங்க முழிக்கிறாங்க. அப்போ கொஞ்சம் அதை வச்சி காமெடியா எடுத்துருக்காங்க. இதுக்கு ஏ சான்றிதழ் கொடுத்தாச்சு. ஆனா விரசம் இல்லாத படம்னு சொல்றதுக்கு என்ன இருக்கு.

இளங்கோ ராம் இயக்கியுள்ளார். வைபவ், சுனில், முனிஷ்காந்த், ரெடின்கிங்ஸ்லி, பாலசரவணன், தீபான்னு பலர் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துக்கு அறிவியல்ரீதியா காரணம் சொல்லணும். அதையும் சொல்லல. வைபவ் குடிகாரன் வேஷம். நமக்கே எரிச்சல் ஆகுது. படத்துக்கு டெக்னிகலா நல்லா பண்ணிருக்காங்க.

இது ஒரு குறும்படத்துல சொல்ல வேண்டிய விஷயம். இதைப் போயி முழுநீளப்படமா கொண்டு வர்றது சிரமம். ஒரு கட்டத்துக்கு மேல சிரிக்கிறதா, அழுகுறதான்னு தெரியல. எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல விட்டா போதும். கிளம்பிடலாம்னு தோணுச்சு என்கிறார் செய்யாறு பாலு. பில்டப் கொடுக்காதீங்க. A படம். சிரிக்கிறவங்க சிரிங்கன்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம். பேருல மட்டும்தான் பெருசு. மத்தபடி இது சிறுசுதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment