Categories: latest newstelevision

சிங்கப்பெண்ணே: துளசி சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த ஆனந்தி… அடுத்து நடப்பது என்ன?

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடந்ததுன்னு பார்க்கலாமா…

அன்பு காயப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறான். ஆனந்தி அவனைப் பார்த்து மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்து அழுகிறாள். ஆனால் அன்புவோ மயக்க நிலையில் இருக்கிறான். துளசி தான் உனக்கு சரியான பொருத்தம். நான் தகுதியானவள் இல்லை. இந்த ஜென்மத்தில் இல்லேன்னாலும் வேற ஜென்மத்திலாவது நான் உங்களுக்கு மனைவியா வருவேன் என்று கதறி அழுகிறாள் ஆனந்தி.

துளசி உங்களுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறாள். எழுந்து வாங்க. உங்களுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன். நிச்சயம் கண் முழிப்பீங்க அன்பு. கண்ணைத் திறங்க அன்பு என்றபடி கதறி அன்புவின் நெற்றியில் விபூதியைப் பூசுகிறாள்.

அந்த நேரம் பார்த்து அன்புவின் அம்மாவும், தங்கையும் மருத்துவமனைக்கு அன்புவைப் பார்க்க வருகிறார்கள். முத்துவும் அன்புவைப் பார்த்துவிட்டு வருகிறான். வெளியே வந்ததும் அன்புவின் அம்மாவும், தங்கையும் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இந்த நேரம் ஆனந்தி உள்ளே இருக்கிறாளே என்ன செய்வது என அதிர்ச்சி அடைகிறான்.

சௌந்தர்யா, துளசியும் பயப்படுகிறார்கள். அவர்களைத் தடுக்க துளசியும், சௌந்தர்யாவும் எவ்வளவோ பேசிப் பார்க்கிறார்கள். ஆனால் விபூதி பூசணும்னு ஆசைப்படுகிறாள் அன்புவின் அம்மா. அப்போது ஆனந்தி ஒளிந்து கொள்கிறாள். யாரு அன்புவுக்கு விபூதி வச்சி விட்டதுன்னு கேட்கிறாள். அதற்கு துளசி நான்தான் வச்சி விட்டேன் அத்தைன்னு சொல்லி சமாளிக்கிறாள்.

பக்கத்து கோவிலுக்குச் சென்று அன்பு குணமாகணும்னு வேண்டிக்கிட்டேன்னு சொல்லி சமாளிக்கிறாள். அதற்கு துளசி வச்ச விபூதி கண்டிப்பாக இவனைக் குணப்படுத்தும்னு தோணுச்சுன்னு அன்புவின் அம்மா சொல்கிறாள். துளசி என் பிரார்த்தனையை விட உன் பிரார்த்தனைக்குப் பலம் அதிகம்னு சொல்கிறாள் அன்புவின் அம்மா. அப்போது கீழே ஒளிந்து கொண்டே ஆனந்தி அதைக் கேட்கிறாள்.

முத்து அம்மாவுக்கு ஆட்டோ பிடிச்சிக் கொடுன்னு சொல்கிறாள் அவனது தோழி. அப்போது துளசி ஆனந்தியிடம் அத்தையும், யாழினியும் போய்ட்டாங்க வாங்கன்னு சொல்கிறாள். ஆனந்தி அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறாள். சில சமயத்துல கடவுள் மனித ரூபத்துல உதவுவதாக சொல்வாங்க. இன்னைக்கு உங்களை நான் கடவுளாகத் தான் பார்க்கிறேன் என்கிறாள் ஆனந்தி. இன்னைக்கு மட்டும் நான் அன்புவை பார்க்காம இருந்திருந்தா குற்ற உணர்ச்சியில செத்துருவேன்னு ஆனந்தி அழுகிறாள்.

உங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது ஆனந்தின்னு துளசி அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்கன்னு யார் சொன்னது? நீங்க ஏன் இப்படி பேசுறீங்கன்னு துளசி ஆனந்தியிடம் சொல்லி சமாதானப்படுத்துகிறாள். இனிமே நீங்க சேர மாட்டீங்கன்னு நினைக்கவே கூடாதுன்னு துளசி சொல்கிறாள். அந்த நம்பிக்கை எல்லாம் எப்பவோ போச்சு. நீங்களும், அன்புவும் சேருங்கன்னு சொல்கிறாள் ஆனந்தி.

இப்ப நானும் அன்புவும் சேருவதை விட நீங்களும் அன்புவும்தான் சேரணும். அதுதான் சரியானதும் கூட. அன்புக்காகவே வாழ்றவள் நீங்கதான். நான் பாதியில வந்தவள். பாதியில போறதுதான் நியாயம் என்கிறாள் ஆனந்தி. அதற்கு துளசி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? எனக்கு ஒரு மொட்டைக் கடிதாசி வந்தது. என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கத் தான் வந்தேன். அன்புவையும் உங்களையும் சேர்த்து வைக்கத்தான் வந்தேன் என்கிறாள் துளசி.

அத்தைக்கே என்னைப் பிடிக்காமப் போயிடுச்சுன்னு ஆனந்தி அழுகிறாள். அதற்கு துளசி நீங்க நெற்றியில வச்ச விபூதியால தான் அன்பு பிழைச்சிக்குவான்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சுன்னு சொல்கிறாங்க அத்தை. எல்லாத்துக்கும் மேல அன்பு உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க. அந்தக் காதல் தோற்காதுன்னு சொல்கிறாள் துளசி.

கூடிய சீக்கிரத்தில் வா மருமகளேன்னு அத்தை கூப்பிடத்தான் போறாங்க. நீங்க எதை வச்சிக்கிட்டு அன்புவும் நீங்களும் சேர மாட்டீங்கன்னு சொல்றீங்கன்னு தெரியல. வேற ஏதோ விஷயம் இருக்குன்னு துளசி சொல்லவும் ஆனந்தி அதிர்ச்சி அடைகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

6 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

9 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

10 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago