Categories: latest newstelevision

சிங்கப்பெண்ணே: தப்பித்த ஆனந்திக்கு வந்தது மீண்டும் சிக்கல்… இனி எடுக்கப் போகும் முடிவு அதுதானா?

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே டிவி தொடரில் இன்றைய எபிசோடின் கதைச்சுருக்கம் இதுதான். மகேஷ் கம்பெனியில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களையும் வரவழைத்து ஹாலில் நிற்கச் செய்தார்கள். நர்ஸ் ஒவ்வொருவரின் ரிப்போர்ட்டையும் வாசித்து பிரச்சனை இருந்தால் மருத்துவரை சந்திக்க உள்ளே அனுப்பிக் கொண்டு இருக்கிறார்.

கருணாகரன், முத்து, அன்பு மற்றும் பெண் ஊழியர்கள் உள்பட ஒவ்வொருவராக வாசித்து அனுப்பி வருகிறார். உள்ளே மருத்துவர் ஒவ்வொருவருக்கும் என்ன பிரச்சனை? அதற்கு என்ன மருந்து சாப்பிடுவது என ஆலோசனை சொல்லி அனுப்பி விடுகிறார். ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியாதபட்சத்தில் மருத்துவமனைக்கு வரச் சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார்.

இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபடி நிற்கிறார் ஆனந்தி. அடுத்து தன்னோட பெயர் வந்து விடுமோ? ரிப்போர்ட்டில் உள்ளது அனைவருக்கும் தெரிந்து விடுமோ? மருத்துவர் என்ன சொல்வாரோ என பயந்தபடி நிற்கிறாள் ஆனந்தி. அதை அன்புவும், மகேஷூம் பார்த்து விடுகிறார்கள். இந்நிலையில் ஆனந்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கிறாள். முக்கியமாக எப்படி அங்கிருந்து தப்பிப்பது என்பதிலேயே குறியாக இருக்கிறாள்.

ஆனந்தியை நர்ஸ் அழைக்கிறார். ஆனால் போகாமல் ஸ்தம்பித்து நிற்கிறாள் ஆனந்தி. அவளது சக ஊழியர்கள், அன்பு, மகேஷ் என எல்லாருமே அவளைப் போய் ரிப்போர்ட்டை வாங்கச் சொல்கின்றனர். அவளும் பயந்தபடி வாங்கி விட்டு மருத்துவரை சந்திக்கச் செல்கிறாள். ஆனால் நர்ஸோ ‘உங்களுக்கு ஒண்ணும் இல்லம்மா, நீங்க போகலாம்’ என்கிறார்.

உடனே ஆனந்திக்கு ஆச்சரியம். அதெப்படி இப்படி ரிப்போர்ட் வரும் என்று திகைத்து நிற்கிறாள். உடனே அன்பு, மகேஷ் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். அன்பு ‘இனி இதிலும் பிரச்சனை இல்லை என்று தெரிந்துவிட்டது. அப்படின்னா என்னதான் உனக்குப் பிரச்சனை?’ன்னு அன்பு கேட்டுவிட்டுச் செல்கிறான். உடனே நர்ஸிடம் மருத்துவரைப் பார்க்க அனுமதி கேட்கிறாள் ஆனந்தி.

மருத்துவரை சென்று பார்த்த ஆனந்திக்கு ஒரே ஆச்சரியம். அந்த மருத்துவர் தான் முதலில் ஆனந்திக்கு மருத்துவப்பரிசோதனை செய்து கர்ப்பம் என்று தெரிவித்தார். அவரிடம் ஆனந்தியும் சண்டை போட்டாள். அதன்பிறகு இப்போதும் அந்த மருத்துவர்தான் ஆனந்தியைக் காப்பாற்றி இருக்கிறார். அதன் பின்னணி என்ன என்றால் காயத்ரி தான் மருத்துவமனை வரை சென்று ஆனந்தியின் நிலையை எடுத்துக்கூறி இப்படி ஒரு சூழல். அவளது அக்கா கல்யாணம் இந்த பிரச்சனையால் நின்று விடக்கூடாது.

அதனால் நீங்க தான் உதவணும்னு கேட்க அந்த நிலையைப் புரிந்து கொண்ட மருத்துவரும் ஆனந்திக்காக உதவுகிறார். இந்த சூழலில் ஆனந்திக்கு அந்த விவரத்தை மருத்துவர் எடுத்துச் சொன்னது மட்டும் அல்லாமல், இன்னும் கொஞ்ச நாள் ஆனால் டெஸ்ட் எடுக்கத் தேவையில்லை. உன் வயிறே காட்டிக் கொடுத்துவிடும் என்று சொல்கிறார்.

அதனால் உனக்கு 2 சான்ஸ் தான் இருக்கு. உன்னை நம்பி வருபவரைக் கல்யாணம் செய்து கொள். இல்லாவிட்டால் கருவைக் கலைத்து விடு என்று ஐடியா கொடுக்க கதவைத் திறந்தபடி ஆனந்தி அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறாள். இனி நாளைய எபிசோடில் ஆனந்தி எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதைக் காணலாம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

6 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

9 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

10 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago