Categories: latest news

சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் மருத்துவப்பரிசோதனை ரிசல்ட்… அன்பு, மகேஷூக்கு தெரிந்ததா?

சன்டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே தொடரில் இன்று நடந்த கதைச்சுருக்கம் விவரம் வருமாறு.

ஆனந்தியின் கர்ப்பத்துக்குக் காரணம் யார் என தேடும் முயற்சியில் ஈடுபட்ட ஆனந்திக்கு அது தோல்வியில் முடிகிறது. அதே நேரம் அதற்கான முயற்சிகளிலும் அவள் ஈடுபட்டே வருகிறாள். இது இப்படி இருக்க ஆனந்தி தனது கர்ப்பத்தை தனது நண்பர்களான காயத்ரி, ரெஜினா, சௌந்தர்யா தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை. அவள் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று மறைக்கிறாள்.

இது மகேஷ், அன்பு மற்றும் அவனது குடும்பத்தினருக்கு வேறு விதமாக சந்தேகத்தை வரவழைக்கிறது. ஆனந்தியின் பெற்றோருக்கும் சில நேரங்களில் குழப்பம் வருகிறது. இது ஒரு புறமிருக்க மகேஷ் ஆனந்தியின் உடல்நலத்தில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என யூகித்து அவளுக்குத் தெரியாமல் கம்பெனிக்கு மருத்துவக்குழுவை வரவழைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்கிறார். ஆனந்திக்கு அதிர்ச்சி.

ஆரம்பத்தில் என் உடல் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை என முரண்டு பிடிக்கிறாள். அதன்பிறகு அனைத்து அலுவலர்களும் ஒன்று சேர்ந்து அவளுக்கு ரத்தப்பரிசோதனை செய்ய மருத்துவருக்கு உதவி செய்கிறார்கள். அப்போது இருந்தே ஆனந்திக்கு அன்பு மேல் கோபம். ஏன் என் உடம்புக்குத்தான் ஒண்ணும் ஆகலன்னு சொன்னேனே எதற்கு ரத்தபரிசோதனை எடுத்தீர்கள் என கோபமாகக் கேட்கிறாள்.

தொடர்ந்து அனைவருடனும் பதற்றத்துடனே பேசுகிறாள். அடுத்து எந்த மருத்துவமனை? டெஸ்டை எப்படி தடுத்து நிறுத்தலாம் என தனது தோழி காயத்ரியிடம் சொல்ல அவளும் முயற்சித்து அது தோல்வியில் முடிகிறது. கடைசியில் அன்று மாலையே மருத்துவப்பரிசோதனைக்கான ரிசல்ட் கம்பெனிக்கு வந்து விடுகிறது. இந்த நிலையில் மித்ராவுக்கு ஒரு நடுக்கம்.

ஆனந்தியின் ரிசல்ட் தெரிந்து விட்டால் மகேஷ் தனக்குக் கிடைக்க மாட்டாரோ என்று. அதனால் அவளும் அரவிந்த் மூலமாக எப்படியாவது தடுத்து நிறுத்தலாம் என திட்டம் தீட்டுகிறாள். அதுவும் தோல்வியில் முடிகிறது. இந்த நிலையில் மகேஷ், அன்பு, அலுவலர்கள், கருணாகரன், மித்ரா என அனைவரும் ஹாலில் இருக்க மருத்துவப்பரிசோதனைக்கான ரிசல்ட் வாசிக்கப்படுகிறது. அப்போது மகேஷ் எல்லாரும் டென்ஷனா இருக்காங்க. அதனால அரவிந்தை மட்டும் அறைக்குள் மருத்துவருடன் போகச் சொல்கிறார். மித்ராவும் பரபரப்பாகிறார்.

அங்கு தனியாக ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களது ரிசல்ட்டை தனிப்பட்ட முறையில் சொல்வார்கள். அதனால் ஆனந்திக்கு பதற்றம் அதிகரிக்கிறது. அன்பு அவளைப் பார்த்து இவளது உடலுக்கு ஏதாவது இருக்குமோ? அதனால்தான் இப்படி பயப்படுகிறாளோ என எண்ணுகிறான். மகேஷூம் இவளது பதற்றத்தைப் பார்த்துத்தான் அரவிந்தைத் தனியாக அறைக்குள் போகச் செய்தார். இப்போது மகேஷூம், அன்புவும் பதற்றமான ஆனந்தியின் முகத்தைப் பார்க்கிறார்கள். அடுத்து என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

1 hour ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

12 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

12 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

19 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago