SitaareZameenPar: இருக்கும் வாழ்க்கையை குறை சொல்லும் பலர் மத்தியில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும் சாதிக்க துடிக்கும் ஒரு கூடை பந்து டீம் பற்றிய சித்தாரே ஜமீன் பர் படத்தின் விமர்சனம் இங்கே.
கற்றல் சவால்களை எதிர்கொள்ளும் சிறுவனை மையமாக கொண்டு உருவான திரைப்படம் தாரே ஜமீன் பர். அதை போல டவுன் சிண்ட்ரோம் இருக்கும் பிள்ளைகளை கொண்ட கூடைப்பந்து டீம் பற்றிய தான் இந்த சித்தாரே ஜமீன் பர்.
இப்படத்தில் அமீர்கான், ஜெனிலியா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கூடைப்பந்து பயிற்சியாளரான அமீர்கான் சரியான முரட்டு ஆள். அவருக்கு பனிஷ்மெண்ட்டாக டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளின் கூடை பந்து டீமுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார்.
முதலில் பெரிய விருப்பம் இல்லாமல் கடமைக்காக அதை தொடங்கும் அமீர்கானுக்கு வாழ்க்கை என்பதை அந்த பிள்ளைகள் புரிய வைக்கும் உணர்வுபூர்வமான கதையாக அமைந்து இருக்கிறது சித்தாரே ஜமீன் பர்.
பல வருடங்கள் கழித்து ஃபீல் குட் படமாக ரிலீஸாகி இருப்பதால் பலருக்கு இப்படம் மன நிறைவாக அமைந்துள்ளது. முதல் பகுதி மெதுவாக போனாலும் இரண்டாம் பகுதியில் விறுவிறுப்பாக இருக்கிறது. டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளாக நடித்திருப்போரும் மனம் நிறைவாக நடித்து அசத்திவிட்டனர்.
படத்தின் மியூசிக்கை ஷங்கர்-ஏசான்-லாய் இசையமைத்து இருக்கிறார். பெரிய பிளஸாக இல்லை என்றாலும் படத்திற்கு சரியான தேர்வாகி இருக்கிறது. அமீர்கான் நடிப்பு மட்டுமல்ல எல்லாருமே பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளனர். எந்த லாஜிக்கையும் பார்க்காமல் மனம் நிறைவிற்கு இந்த படம் கண்டிப்பாக மிஸ் பண்ணாதீங்க!
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…