Categories: latest news

The Raja Saab: அடேய் காப்பாத்துங்க என்னைய… பிரபாஸுக்கு இது இன்னொரு சான்ஸ்… தி ராஜா சாப் டீசர் எப்படி இருக்கு?

The Raja Saab: பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் தி ராஜா சாப் படத்தின் டீசர் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

யூவி கிரியேஷன் தயாரிப்பில் மருத்து தசாரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தி ராஜா சாப். இப்படத்தில் பிரபாஸ், ரிஷப் ஷெட்டி, மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்து வருகின்றனர்.

ஹாரர் மற்றும் ஆக்ஷன் கலவையில் இப்படம் உருவாக்கப்பட்ட இருப்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருக்கிறார்.

வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக தெலுங்கு திரைப்படங்கள் ஹாரர் கலவையில் வெளியாகும் போது நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் இத்திரைப்படமும் அருந்ததி படம் போன்ற மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் டீசரில் அமானுஷ்ய விஷயங்களும், ஆக்ஷன் சண்டைக் காட்சிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. காதல் காட்சிகள் டீசரில் இடம்பெற்று இருப்பதால் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா என இருவருமே பிரபாஸுக்கு ஜோடியாக இருக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் விஷுவல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸிற்கு மிகப் பெரிய வெற்றிப் படம் இதுவரை அமையவில்லை.

சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தி ராஜா சாப் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

11 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago