Love Marriage Review: கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் களமிறங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. எனவே, விக்ரம் பிரபு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதில் அரிமா நம்பி உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே ஹிட் அடித்தது.
இவரின் பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவரும் பல கதைகளிலும் நடித்துப்பார்த்தார். பெரிதாக கிளிக் ஆகவில்லை. இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடித்து வெளியான டானாக்காரன் படம் அவருக்கு ஒரு நல்ல படமாக அமைந்தது. அவரும் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்.
இந்நிலையில்தான், அவருக்கு லவ் மேரேஜ் படம் கிடைத்திருக்கிறது. சண்முக பிரியன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்திருக்கிறார். மேலும், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஜுன் 27ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது.
ஆனால், நேற்று இரவு கோவையில் பிரீமியர் ஷோ காட்டப்பட்டிருக்கிறது. படம் பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். லவ் மேரேஜ் ஒரு சூப்பர் ஃபீல் குட் திரைப்படம், டாணாக்காரனுக்கு பின் இது விக்ரம் பிரபுவுக்கு வெற்றிப்படமாக அமையும். முதல் பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி நல்ல ஒரு ஃபேமிலி டிராமா. இந்த படத்தில் டிவிஸ்ட் இல்லை. ஆனால், படம் எங்கேயும் போரடிக்கவில்லை என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், மனித உணர்வுகளை இப்படம் பேசுகிறது. குடும்பத்துடன் பார்க்க ஒரு சிறந்த படம் என படம் பார்த்தவர்கள் சொல்லி வருகிறார்கள். வெளியாகும் ரிசல்ட்டை பார்க்கும் போது விக்ரம் பிரவுக்கு லவ் மேரேஜ் திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…