அப்பா படத்தின் டைட்டிலேயே தட்டி தூக்கிய அதர்வா.. காதல் பொங்க வெளியான டீசர் எப்படி இருக்கு?..

Actor Atharvaa: தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மகன் என்கின்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. ஆரம்ப காலகட்டத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த அதர்வா தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக தோல்வி திரைப்படங்கள் தான்.
கடைசியாக கடந்த ஆண்டு நிறங்கள் மூன்று என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியானதற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் அதர்வா நடிப்பில் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ‘அட்ரஸ்’, ‘தணல்’, ‘டி.என்.ஏ மூன்று திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இந்த திரைப்படத்தின் அப்டேட்டும் வெளியாகவில்லை.
பராசக்தி திரைப்படம் : இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் நடிகர் அதர்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் வெளியான டைட்டில் டீசரில் இவரின் லுக் மற்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. நிச்சயம் அதர்வாவின் கெரியரில் பராசக்தி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதயம் முரளி: தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பாளராக பல திரைப்படங்களை தயாரித்து வரும் தவான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஓனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் அதர்வா நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகி இருக்கின்றது. படத்திற்கு இதயம் முரளி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹரோ, நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்கள். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்தது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றார். படத்தின் டைட்டிலுடன் சேர்த்து பஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு நடிகர் அதர்வாவின் அப்பா முரளியின் அடைமொழி பெயரோடு டைட்டில் வைக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
டீசர் எப்படி இருக்கு: நியூயார்க் சிட்டியில் அமர்ந்து கொண்டு தனது போனில் 2012 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கின்றார் அதர்வா. அதில் நடிகை கயாடு லோஹரோவை அவர் ஒருதலையாக காதலித்து வருவது தெரிகின்றது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து நட்டியிடம் இருந்து போன் கால் வருகின்றது.
அவருக்கு அங்கு கல்யாணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் யாரிடமும் சொல்லாமல் நியூயார்க்கு வந்து விடுகின்றார். பின்னர் அங்கிருந்து கிளம்புகின்றார். அவருக்கு பிரீத்தி முகுந்தனுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அதர்வா கடைசியில் யாரை திருமணம் செய்கின்றார் என்பது போல் படத்தின் டீசர் அமைந்திருக்கின்றது.
மேலும் நட்டி இந்த வீடியோவின் இறுதியில் இந்த உலகத்தில் பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, நம்ம டைட்டானிக் ஜேக்கோ இல்ல.. பெஸ்ட் லவ்வர்னா அது இதயம் முரளி தாண்டா என்ற வசனம் இடம் பெற்றிருக்கின்றது. இந்த டீசரை வைத்து பார்க்கும் போது இது ஒரு சிறந்த காதல் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.