ஜீவாவுக்கு அடுத்த ரவுண்ட் ரெடி போலயே? அகத்தியா பட திரை விமர்சனம் இதோ!

Aghathiya: பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் அகத்தியா திரைப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இப்படத்தின் திரை விமர்சனம் இதோ.
அகத்தியா கதை: பழமையான வீட்டில் இருக்கும் பியானோ ஒன்று சுதந்திர காலத்துக்கு செல்லும் போர்ட்டலை உருவாக்கும் சக்தியை பெற்று இருக்கும். அதை அடைய சித்தா பயிற்சியாளர் மற்றும் வில்லன் முயற்சி செயய் என்ன நடிக்கிறது என்பதுதான் கதை.
பாடலாசிரியர் பா விஜயின் எழுத்தில் படத்தின் கதை வித்தியாசமாக அமைந்துள்ளது. வித்தியாசமான விஷயங்களை முன்வைக்கிறார். பேயாட்டம் நிறைந்த வீடுகள், காலனித்துவ வில்லன்கள், மற்றும் மந்திரமயமான மருந்துகள்.
சில இடங்களில் படம் குழப்பத்தையே கொடுத்தாலும் திரைக்கதை அதை பெரிதாக பாதிக்காமல் பார்த்து கொள்கிறது. எப்போதும் போல ஜீவா நடிப்பில் அசத்தினாலும் முதன்முறையாக அர்ஜூன் பல ஆண்டுகள் கழித்து மாந்திரீக படத்துக்குள் வந்துள்ளார். ராஷி கண்ணாவுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. அதனால் ஓகே ரகம்தான்.
இப்படத்தில் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது வி எப் எக்ஸ் காட்சிகள் தான். எந்த இடத்திலும் குளறுபடி இல்லாமல் சரியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எடிட்டிங்கில் படம் சில இடங்களில் சொதப்பலை ஏற்படுத்தி ரசிகர்களை கடுப்பாக்கவும் தவறவில்லை.
படம் சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரசிக்கும்படியான ஒரு ஹாரர் திரைப்படமாக அகத்தியா அமைந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்க்கும் போது நல்ல அனுபவமாக அமையும் எனவும் கூறலாம்.