கதையே முடிஞ்சிப் போச்சு... ஏன்யா பைட்டு? அகத்தியா படத்தின் மைனஸ்கள்

இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் அகத்தியா. பாடல் ஆசிரியர் பா.விஜய் டைரக்ஷன்ல 2வது படம். ஜீவாவுக்கும் இது முக்கியமான படம். அர்ஜூன், ராஷிகண்ணா, ராதாரவி உள்பட பலரும் நடித்துள்ளனர். படத்தின் விமர்சனம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு இப்படி சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
மொத்த கதை: ஜீவா பாண்டிச்சேரில படம் எடுக்கணும் ஆசைப்படுறாரு. அங்கே பெரிய செட் போடுறாரு ஜீவா. அவரு சொந்த செலவுல போடுறாரு. படத்தில் நடிக்கிற கதாநாயகன், கதாநாயகி மணக்குள விநாயகர் கோவிலுக்குப் போறாங்க. கல்யாணம் பண்ணிட்டு ஓடிப்போயிறாங்க. தயாரிப்பாளர் அந்தப் படமே லாஸ்ன்னு சொல்றாரு. போட்ட செட் என்னாகுறது? ஜீவா வேற செலவு பண்ணிடுறாரு.
அதுக்கு 30 லட்சம் செலவு. அதுவும் வேஸ்ட். அப்போ உதவியாளர் ராஷி கண்ணா ஒரு ஐடியா கொடுக்கிறாரு. இந்த செட்டையே நாம பேய்வீடா மாத்துனா என்னன்னு. அதே மாதிரி மாத்துறாங்க. அதே மாதிரி மாத்துறாங்க. டிக்கெட் போடுறாங்க. பார்வையாளர்கள் நிறைய பேர் வர்றாங்க. ஆனா அதுல சில அமானுஷ்ய விஷயங்கள் எல்லாம் நடக்குது. அது எதுக்காக நடக்குது? என்னென்ன விளைவுகள் ஏற்படுதுங்கறதுதான் மொத்த கதை.
மெய்ன் வில்லன்: படம் ஆரம்பிச்சி கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா ஜாக்சன் துரைன்னு ஒரு படம் வந்துச்சே. அப்படி இருக்குமோன்னு நினைச்சேன். அர்ஜூன் படத்துக்குள்ள வந்ததும் வேற லெவல் ஆகிடுச்சு. அவர்தான் மெய்ன் வில்லன். அந்தக் கதாபாத்திரம், அந்த நினைவு, அந்த சமயத்துல நடக்குறது எல்லாம் சொல்லிருக்காங்க.
இந்த படத்துல பாண்டிச்சேரியில ஏன் நடக்குதுன்னு பார்த்தா எதுவும் சொல்லல. பிரெஞ்சுக்காரர்கள் உள்ள வாராங்க. அவருக்கும் அர்ஜூனுக்கும் என்ன சம்பந்தம்னு சொல்றாங்க. படத்துக்கு நல்ல செலவு பண்ணிருக்காங்க. விஎப்எக்ஸ் அருமையா இருக்கு. அர்ஜூன் நடிப்புதான் சூப்பர்.
தேவையில்லாத காமெடி: அவர் சித்த வைத்தியர் கேரக்டர்ல வர்றாரு. அதோட பிரெஞ்சுக்காரர்கள் எப்படி கனெக்ட் ஆகுறாங்கங்கறதுதான் செகண்ட் பார்ட். மியூசிக் பிளஸ் பாயிண்ட். கதை சொல்வதில் நேர்த்தியான விஷயத்தை பா.விஜய் கையாண்டுள்ளார். விறுவிறுன்னு போகுற படம் ஸ்ட்ரக் ஆகிறதுக்குக் காரணம் தேவையில்லாத காமெடி வருது. இது காமெடி படம் இல்ல. சீரியஸ் படம். பாண்டிச்சேரின்னா பாரதிதாசன் மட்டும்தானா? பாரதியார், அரவிந்தரை எல்லாம் ஏன் மிஸ் பண்ணிட்டாங்கன்னு கேள்வி எழுகிறது.
கதையே முடிஞ்சிப் போச்சு: படம் நீளமா போகுறதுதான் மைனஸ். கடைசியில ஏன் அந்த கிளைமாக்ஸ் பைட்?கதையே முடிஞ்சிப் போச்சுன்னு ஆடியன்ஸ்சுக்கு எரிச்சல் ஆகிடும். இன்னும் கொஞ்சம் நறுக்குன்னு டைரக்டர் பா.விஜய் சொல்லி இருக்கலாம். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாதது பிளஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.