எப்பேர்பட்ட மனுசன என்னையா பண்ணி வச்சிருக்கீங்க!.. மொத்தத்துல விடாமுயற்சி ஒரே அதிர்ச்சி..!

by Ramya |
ajith vidamuyarchi
X

Vidamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்த்து கடந்த இரண்டு வருடங்களாக அஜித் ரசிகர்கள் பெரிதும் காத்திருந்தார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கின்றது.

காலை முதலே அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 1000 ஸ்கிரீன்களில் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. படத்திற்கு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பாசிடிவ்வான விமர்சனங்களை கொடுத்தாலும், பொதுமக்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களை தான் கொடுத்து வருகிறார்கள்.


வலைப்பேச்சு விமர்சனம்: விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்த சினிமா விமர்சகர்கள் பலரும் படம் குறித்து பாசிட்டிவான மற்றும் நெகட்டிவ்வான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில் வலைப்பேச்சு டீம் விடாமுயற்சி திரைப்படத்திற்கு தங்களது விமர்சனங்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது ' நடிகர் அஜித் தன்னை மாஸ் ஹீரோ என்பதை மறந்து பல படி கீழே இறங்கி வந்து நடித்திருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

மாஸ் ஹீரோவாக நடித்து அசத்தி வந்த அஜித் எப்படி இப்படி ஒரு திரைப்படத்தில் நடித்தார் என்பது தெரியவில்லை. அஜித் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்குமா? இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிப்பார்களா? என்பதை அஜித் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. இந்த திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் பார்க்க வருவார்கள் என்பதை உணர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் சில மாஸ் காட்சிகளை வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அது எதுவுமே இந்த திரைப்படத்தில் இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. இந்த கதையை அஜித்தான் சிபாரிசு செய்தார் என்று மகிழ் திருமேனி கூறியிருந்தார். அவரே கூறியதாக இருந்தால் கூட சில விஷயங்களை படத்தில் வைத்திருந்தால் அஜித் ரசிகர்கள் நிச்சயம் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.

நடிகர் அஜித் மிகப் பெரிய ஹீரோ படத்தில் அவரின் மனைவி இன்னொருத்தருடன் தொடர்பு வைத்து இருக்கின்றார் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். திரிஷாவுக்கு ஏற்பட்ட மற்றொரு உறவு காரணமாக அஜித்தையே அவர் விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்திருப்பார். ஆனால் இந்த தகவலை எல்லாம் தெரிந்து கூட நடிகர் அஜித் அதிர்ச்சியாகாமல் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் இன்று தினத்தந்தி பேப்பர் வரலையா என்பது போல ரியாக்ஷன் கொடுத்துவிட்டு சென்று விடுகின்றார்.

இப்படி அஜித் கதாபாத்திரத்தை டிசைன் செய்திருப்பது மிகப்பெரிய ஏற்படுத்தி இருக்கின்றது. பிரேக் டவுன் திரைப்படத்தின் தழுவல் என்று கூறினாலும் படத்தின் நீளத்தை இழுப்பதற்காக தேவையற்ற காட்சிகளை சேர்த்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பிளாஷ் பேக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதெல்லாம் எதுக்கு என்பது படத்தில் தெரியவில்லை.

ஒரு ஆக்சன் ஹீரோவை எந்த அளவுக்கு தவறாக காட்ட வேண்டுமோ அந்த அளவிற்கு தவறாக இப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். இதில் ஹீரோயிசத்திற்கான இடம் எதுவென்றால் இவரின் மனைவியை கடத்திய பிறகு அவரை மீட்கின்ற அந்த காட்சியிலாவது அஜித் ஹீரோயிசத்தை காட்டி இருக்கலாம். ஆனால் அப்போது கூட வில்லன் கும்பலிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார். வரவர் போறவரெல்லாம் அஜித்தை போட்டு அடி அடி என்று அடிக்கிறார்கள்.

அதிலும் ஆரவ் சினிமாவில் இப்போது வந்தவர், அவர் கூட அஜித்தை அடிக்கும் காட்சி எல்லாம் சற்று கூட ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அது மட்டும் இல்லாமல் அவர்கள் என்ன சொன்னாலும் அதை மட்டும் செய்து கொண்டு எந்த ஒரு ஹீரோயிஸமும் இல்லாமல் இந்த படத்தில் நடித்திருக்கின்றார். மேலும் படத்தில் இருக்கக்கூடிய முக்கிய விஷயங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் இருக்கின்றது.


இவை அனைத்துமே கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு புரியாத வகையில் இருக்கின்றது. படத்தினுடைய ஒரே ஆறுதல் என்றால் அது திரிஷா மற்றும் அனிருத் தான். படத்தில் கொஞ்சம் நேரம் தான் திரிஷா வருகிறார் என்றாலும், தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருக்கின்றார். மேலும் அனிருத் பிஜிஎம் பாடல் மிக சிறப்பாக ஒர்க் அவுட்டாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தை ஹைதராபாத், மும்பை போன்ற பகுதிகளில் எடுத்திருக்கலாம்.

இவ்வளவு கோடி செலவு செய்து அஜர்பைஜானில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம்தான். இன்னும் சொல்லப்போனால் அஜர்பைஜானில் எடுத்ததால் என்னவோ படத்தின் கதையோடு லொகேஷன் ஒட்டவில்லை. ஆக மொத்தம் விடாமுயற்சி ஒரே அதிர்ச்சி என்று கூறியிருக்கிறார்.

Next Story