விஜய், அஜித், தனுஷ் பண்ண வேண்டிய படம்!.. பீனிக்ஸ் படத்துக்கு பயில்வான் ரங்கநாதன் சொன்ன விமர்சனம்!..

சண்டை இயக்குனர் டைரக்ட் பண்ணா படம் முழுக்க சண்டையோ சண்டைன்னா எடுக்கணும். விஜய் சேதுபதி மகன் பெண்களின் மனதை பிடிக்க தவறிவிட்டார். ஆரம்பத்தில், ஒரு சாக்லேட் பாயாக நடித்தால் தான் பெண்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள். கரகாட்டக்காரன் படமெல்லாம் பெண்களால் தான் பெரிதாக ஓடியது.
அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனல் தெறிக்கிறது. எங்கே நம்மை குத்தி விடுவார்களோ என்கிற பயமே படத்தை பார்க்கும் போது வந்துவிடுகிறது. அந்தளவுக்கு ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைக் காட்சிகளை படம் முழுவதும் அனல் அரசு வைத்திருக்கிறார்.

எம்எல்ஏ மகன் தான் பாக்ஸிங்கில் ஜெயித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூர்யா சேதுபதியும் அவரது அண்ணனும் பாக்ஸிங் பயிற்சி பண்ணுகின்றனர். யார் வெற்றிப் பெற்றாலும், ஒரு லட்சம் ரூபாய் பணமும், ஹார்பரில் வேலையும் கிடைக்கும் என எம்எல்ஏ சொன்னதை கேட்டு அந்த போட்டியில் சூர்யாவின் அண்ணன் கலந்துக் கொண்டு எம்எல்ஏ மகனை அடி வெளுத்து வெற்றி பெற்றதும், எம்எல்ஏவுக்கு பொறுக்கவில்லை.
அவனை கொன்னுடுங்கடான்னு சொல்ல, சூர்யா சேதுபதியின் அண்ணன் கொல்லப்படுகிறான். அதற்கு பழி வாங்க எம்எல்ஏவையே சூர்யா கொல்ல, அதற்காக சிறுவர் சீர்த்திர்ந்த பள்ளிக்கு அனுப்பபடுகிறான். என் புருஷனை கொன்னவனை கொன்றே ஆக வேண்டும் என வரலட்சுமி சரத்குமார் வெறிபிடித்த பொம்பளையாக வில்லியாக மாற, சூர்யா எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை.
யார் வந்தாலும், அடி, உதை தான். படம் முடியும் வரை அடித்துக் கொண்டே இருக்கிறார். விஜய் சேதுபதி கூட இந்த அளவுக்கு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தது கிடையாது. விஜய், அஜித், தனுஷ் நடிக்க வேண்டிய ஒரு கதையை சூர்யா சேதுபதி தேர்வு செய்து சண்டைக் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால், படத்தின் கதையும், சண்டைக் காட்சிகளிலும் தான் பெரிய சிக்கல்.
சண்டை பிரியர்களுக்கு இந்த படம் சர்க்கரை பொங்கல் என பயில்வான் ரங்கநாதன் பீனிக்ஸ் படத்துக்கு 100க்கு 58 மார்க் கொடுத்திருக்கிறார்.