கதைய வச்சு செஞ்சிருக்காங்க!.. இந்த மாதிரி ஆளுங்க பார்க்கலாம்.. 'மிஸ் யூ' படத்துக்கு ப்ளூ சட்டை விமர்சனம்..!

by Ramya |
miss you
X

miss you

சித்தார்த்: இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் மிஸ் யூ. இந்த திரைப்படத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான சித்தா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார்.


இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிஸ் யூ என்கின்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

படத்தின் கதை:

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சித்தார்த் ஒரு லவ் மூவியில் நடித்திருக்கின்றார். இதனால் இளைஞர்கள் அந்த பாடத்தை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆக்சன், மசாலா படங்களை பார்த்து போரடித்தவர்களுக்கு லவ் சப்ஜெக்டாக இந்த படம் அமைந்திருக்கின்றது. படத்தில் கதாநாயகியை சந்திக்கும் சித்தார்த் அவரை காதலிக்கின்றார்.

கதாநாயகியும் சித்தார்த்தை காதலிக்க இதை ஒரு அரேஞ்ச் மேரேஜாக மாற்ற வேண்டும் என்பதற்காக பெண்ணின் புகைப்படத்தை சித்தார்த் வீட்டில் கொடுக்க அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்த பொண்ணு உனக்கு செட் ஆகாது என்று கூறிவிடுகிறார்கள். திடீரென்று பெற்றோர்கள் அந்த பெண்ணை வேண்டாம் என்று மறுப்பதற்கு என்ன காரணம்? பின்னர் எப்படி திருமணம் நடந்தது என்பது தான் இப்படத்தின் கதை.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

படத்தின் கதை ஓரளவுக்கு தேர்த்தும் அளவிற்கு இருக்கின்றது. இந்த படத்திற்கு ஸ்கிரீன் பிளே நமக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. வருஷத்துக்கு இதுபோல பல படங்களை நாம் பார்க்கிறோம். நம்முடைய சினிமா அறிவுக்கு இவர்கள் செய்த ஸ்கிரீன் பிளேவில் அடுத்தடுத்து இதுதான் வரப்போகின்றது என நன்றாகவே தெரிகின்றது. அந்த அளவுக்கு தான் இவர்களின் ஸ்கிரீன் ப்ளேவில் வேலை பார்த்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதையை செஞ்சிருக்காங்க. இவங்க வசதிக்கு ஏத்த போல் டர்னிங், ட்விஸ்ட் என வச்சிருக்காங்க. இந்த மாதிரி படங்களில் ஹீரோவும் ஹீரோயின் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் ஆடியன்ஸ்க்கு வரவேண்டும். ஆனால் இது எந்த இடத்திலும் படம் பார்க்கும்போது நமக்கு வரவில்லை.


படத்தின் கதையிலும் திரை கதையிலும் நிறைய குறைகள் இருந்தாலும் இந்த படத்தை நாம் உட்கார்ந்து பார்க்க முடிந்ததற்கு காரணம் இப்படத்தின் மேக்கிங் தான். அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிஸ் யூ படத்தை தன்னை போல வருஷத்துக்கு பல படங்களை பார்க்கும் நபர்களுக்கு கொஞ்சம் போர் அடிக்கும். எப்போதாவது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

படத்தின் கதையை சிறப்பாக எடுத்திருந்தாலும் இயக்குனர் ராஜசேகர் திரைக்கதையில் அந்த சுவாரஸ்யத்தை தவற விட்டுவிட்டார். ஏதோ சம்திங் மிஸ் ஆனது மாதிரி படம் இருந்தது. மோசமான படம் என்று இல்லாமல் ஓகே ரகம்தான் என்று கூறி இருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன்.

Next Story