Bun Butter Jam: பன் பட்டர் ஜாம் கில்மா படமா? புளூசட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே!

இயக்குனர் ராகவ் மிர்தா இயக்கத்தில் நேற்று வெளியான படம் பன் பட்டர் ஜாம். இந்தப் படத்தின் திரைவிமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
ஹீரோ, ஹீரோயின் இருவரது பெற்றோர்களும் ஃபேமிலி பிரண்ட்ஸ். இவங்க என்ன நினைக்கிறாங்கன்னா நம்ம பிள்ளைங்க ரெண்டுமே கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாருக்குமே.
அப்படின்னு ரெண்டு பிள்ளைகளையுமே யதார்த்தமா பழக விட்டு, லவ் பண்ண வச்சி மேரேஜ் பண்ணி வச்சா லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ் ஆகிடும். நமக்கு திருப்தி ஆகிடும்னு நினைக்கிறாங்க. ஆனா இந்த ஹீரோ இன்னொரு பொண்ணை லவ் பண்றாரு. இந்த ஹீரோயின் இன்னொரு பையனை லவ் பண்றாரு. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை.
வழக்கமா படம் பண்றவங்க ஏதாவது ஒரு உண்மைச்சம்பவத்தையோ, ஒரு விஷயத்துல இன்ஸ்பயர் ஆகியோ அல்லது ஒரு நாவலைப் படிச்சியோ படம் பண்ணுவாங்க. ஆனா இந்த டீம் கொஞ்சம் வித்தியாசமா பண்ணிருக்கு. விவேக் ஒரு சீரியல் காமெடியில உள்ள புகுந்து காமெடி பண்ணுவாரு. அதைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி இந்தப் படத்தை எடுத்துருக்காங்கன்னு நினைக்கிறேன்.
விவேக் அந்த சீரியல்ல புகுந்து இது எல்லாமே கள்ளக் காதலா இருக்கேடான்னு சொல்வாரு. அதுக்கு டைரக்டர் கள்ளக்காதல்ல தான் ஒரு கிக் இருக்கு. யோவ் அசோசியேட் கதையை சொல்டான்னு சொல்வாரு. அவரு சொன்ன கதையைக் கேட்ட விவேக் யாரை யாரு வச்சிருக்கான்னே தெரியலேயேடான்னு பரிதவிப்பார்.

அந்த ரேஞ்சுக்குக் கதையை எடுத்து வச்சிருக்காங்க. இன்னும் கொஞ்சம் டீட்டெய்லா எடுத்தா கில்மா படமாகவே ஆகிருக்கும். மெகா சீரியலுக்குப் போனா ஆரம்பத்துலயே 10, 15 கேரக்டரை ஓப்பன் பண்ணி விட்டுருப்பாங்க. அதுக்கு கிளைக்கதையை சொல்லிருப்பாங்க. அதுல எது நல்லா போகுதோ எந்தக் கேரக்டரோட கால்ஷீட் கிடைக்குதோ அதை வச்சி அந்த எபிசோடயேத் தேத்துவாங்க.
அதே மாதிரி தான் இந்தப் படத்தையும் எடுத்துருக்காங்க. முழு படமுமே இன்ஸ்டாகிராம் ரீல் மாதிரிதான் இருக்கு. இந்தப் படத்துல ஒரு சீரியஸ் கிடையாது. எல்கேஜி பிள்ளைகளுக்கு சீட்டுக்காக அலையற மாதிரி அலையறாங்க. படத்துல பெரிய உறுத்தல் இதுதான். ஆனா இப்ப தான் பிளஸ் 2 பாஸ் ஆகி வெளியே போறதா சொல்றாங்க. இந்தக் கதையே போதுமானதுதான். கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்துருந்தா ஓகே வா ஆகிருக்கும். ஆனா நெருக்கி கில்மா படத்துக்கிட்ட கொண்டு வந்துட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.