படத்துல என்னென்னமோ பண்றாங்க சிரிப்பு தான் வரல...! டிடி நெக்ஸ்ட் லெவல ரெண்டா பொளந்த புளூசட்டைமாறன்

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து நேற்று வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இது ஒரு ஹாரர் காமெடி படம். தில்லுக்கு துட்டு சீரியஸின் 4வது படமாக வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கீர்த்திகா திரிவேதி ஜோடி. தவிர லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் சுமார்தான். இந்தப் படம் எப்படி இருக்குன்னு பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
இது ஒரு பேய் படம். பேய் படம்னா வழக்கமா ஊருக்கு ஒதுக்குப்புறத்துல பாழடைஞ்ச பங்களா இருக்கும். அங்கு தேவையா இருந்தாலும், தேவையில்லன்னாலும் நாலு பேர் போவாங்க. அவங்களை அந்தப் பேய் பாடாப்படுத்தும். அந்தப் பேய்க்கு ஒரு பிளாஷ்பேக் சொல்வாங்க. அது என்ன? அந்தப் பேய்க்கிட்ட இருந்து தப்பிச்சி வந்தாங்களாங்கறது தான் கதையா இருக்கும்.
படத்தோட ஹீரோ சந்தானம் மொக்கை படங்களை எல்லாம் பார்த்துட்டு கழுவி கழுவி ஊத்துற ரிவியூவர். இன்னொரு பக்கம் இந்த ரிவியூவர்களை எல்லாம் ஒரு இடத்துக்கு வரவழைச்சி பழிவாங்குற பேய். நீ படங்களை எல்லாம் கழுவியா ஊத்துற? உன்ன என்ன பண்ணுறேன் பாருன்னு ஹீரோவையும், அவரு ஃபேம்லியையும் அந்தப் படத்துக்குள்ள தள்ளி விட்டுருது.
அந்தப் படத்துல ஒரு பாழடைஞ்ச பங்களா இருக்கு. அங்கு ஒரு பேய் ஒவ்வொருத்தரையா பழிவாங்குது. தமிழ்சினிமாவுக்குள்ள சினிமாவுக்குள்ள சினிமான்னு படம் எடுப்பாங்க. அது ஓடுனது இல்லை. இந்தப் படத்துல சினிமாவுக்குள்ள சினிமா எடுப்பாங்க. அதுல வர்ற டெக்னிகல்லான விஷயங்களை வச்சி காமெடி பண்ணுவாங்க.

அது எல்லாருக்கும் புரியாது. சினிமாவைத் தெரிஞ்சவங்களுக்குப் புரியும். மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளுசபா மாறன் காமெடி நல்லாருக்கும். போன படம் டிடி ரிட்டர்ன்ஸ்ல லாஜிக் முடிஞ்சளவு பண்ணிருப்பாங்க. எல்லா கேரக்டர்சுக்கும் முக்கியத்துவம், காமெடி இருக்கும். ஆனா இதுல மெய்ன் கேரக்டர் சந்தானம் பண்றதே சிரிப்பு வரல. செல்வராகவன் பேய் கேரக்டர்ல வர்றாரு. அதுக்கு என்னதான் நோக்கம்னு தெரியல.
என்னென்னமோ காமெடி பண்ண முயற்சிக்கிறாங்க. சிரிப்புதான் வரல. எலி காமெடி, சந்திரகிரகணம் காமெடி எல்லாம் ரசிக்கற மாதிரி இருக்கு. டெக்னிக்கல், மேக்கிங் நல்லாருக்கு. படத்துல நல்ல கதை. ஆனா இதை இன்னும் கொஞ்சம் காமெடியா எடுத்துருக்கலாம். இதுல சிரிப்பு வருதுன்னாலும் குபீர் சிரிப்பு வரல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.