என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? டிடி நெக்ஸ்ட் லெவலுக்குப் பட்டும் படாமலும் ஒரு ரிவியு

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, கௌதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தைப் பற்றி பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இது குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. காமெடி அட்டகாசம். செகண்ட் ஆஃப் சூப்பர் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஒரு படத்தை எவ்வளவோ கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் முதலீடு போட்டு தயாரிப்பாளர் எடுக்குறாரு. அதை ஈசியா விமர்சனம் செய்து விட்டு படத்தை ஓட விடாமலும் சிலர் செய்கிறார்கள். அதே நேரம் எந்த விமர்சகர்களாலும் நல்லா இருக்குற படத்தை ஓட விடாமல் செய்ய முடியாது. அதே நேரம் நல்லா இல்லாத படத்தை ஓடவும் செய்ய முடியாது. அப்படின்னு பலமாக இந்தப் படத்தில் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சந்தானம் தான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். படத்தில் நிழல்கள் ரவி காமெடி எல்லாம் பெரிதாக எடுபடவில்லை. கௌதம் மேனனை உயிரின் உயிரே பாடலுக்கு ஆட விட்டுருக்கிறார்கள். காமெடியும், ஹாரரும் படத்தில் ஒட்டவில்லை. அப்படியே படத்தின் கதை ஜம்ப் ஆகியபடியே இருக்கிறது.
சின்ன சின்ன கேரக்டர்களில் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாகச் சொல்லணும்னா வடக்குப்பட்டி ராமசாமியில் கூல் சுரேஷின் கேரக்டர் கூட சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். அந்த வகையில் படத்தில் அது மிஸ் ஆகி உள்ளது. மற்றபடி டெக்னிக்கல் லெவலில் சூப்பர். படத்தின் கதை கேட்க பிரமாதம். எடுக்கப்பட்ட விதத்தில் தான் படத்தின் வெற்றி இருக்கிறது.
தப்பு தப்பாக ரிவியு சொல்லும் விமர்சகர்களை ஒரு தியேட்டர் ஓனர் பேயாக வந்து பழிவாங்கும் கதை. படத்தில் செல்வராகவன் தான் தியேட்டர் ஓனர். அவர் விமர்சகர்களை எல்லாம் திட்டுறாங்க. அவரையும் ஒரு கட்டத்தில் கொன்று விடுகிறார்கள். செல்வராகவன் பேயாக மாறி விமர்சகர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார்.
அதில் ஒருவர் சந்தானம். அது ஒரு பாழடைந்த தியேட்டர். அங்கு போனதும் சந்தானத்தின் ஃபேம்லி என்ன ஆகிறது? படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவராக காலியாகிறார்கள். தாக்குப்பிடித்தால் அவர்கள் தப்புவார்கள் என்பதுதான் கதை. ஓடாத படத்தை எந்த ரிவியூவராலும் ஓட வைக்கவே முடியாது.
ஓடும்னு இருந்தா அதை இன்னும் கொஞ்சம் பூஸ்ட் பண்ணி ரிவியூவர்ஸ் ஓட வைக்கலாம். இந்தப் படம் ஜாலியாக சிரித்து விட்டு வர வைத்ததா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.