காமெடியும் இல்ல.. கதையும் இல்ல.. கண்றாவி!.. தேசிங்கு ராஜா 2வை கழுவி ஊத்தும் புளூசட்ட!...

தேசிங்கு ராஜா 2 படம் விமல், மொட்டை ராஜேந்திரன், புகழ், ரவி மரியா ஆகியோரது நடிப்பில் நேற்று வெளியானது. படத்தை இயக்கியவர் எஸ்.எழில். படத்தைப் பற்றிய விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
இது முழுநீள காமெடி படம். ஹீரோ போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார். அதுக்கு பக்கத்து ரேஞ்ச்ல இன்னொரு போலீஸ் இன்ஸ்பெக்டரா ஒரு அம்மாவைக் காட்டுறாங்க. அது தான் புகழ். பொம்பளை வேஷத்துல வர்றாரு. இவங்க ரெண்டு பேருக்குள்ளும் போட்டி இருக்கு. அது ஒரு கதை.
அப்புறம் ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணி பிரேக் அப் ஆகுது. அவங்க ஹீரோ இருக்குற ஆபீஸ்;சுக்கு உயர் அதிகாரியாக வாராங்க. அப்புறம் ஒரு ரௌடியோட தலையை வெட்டி தூக்குச்சட்டியில போட்டு அது கைமாறிப் போகுது. அது ஒரு கதை.
அப்புறம் ஒரு மந்திரியோட கன்டன்ட் வெளிய வந்துட்டுன்னா அது கில்மா ஆகிடும்னு அதைத் தேடிக் கண்டுபிடிக்க மந்திரி அலையறாரு. இதுதான் இந்தப் படத்தோட கதை. நல்லா யோசிச்சிப் பார்த்து ஒரு நாலு சீனாவது சொல்லலாம்னு பார்த்தா இதைத்தான் கதைன்னு சொல்ல முடியுது.

படம் முழுக்க யோசிச்சிப் பார்த்தாலும் எங்காவது ஒரு காமெடி சீனுக்குச் சிரிச்சோமான்னா இல்லை. இது ஒரு காமெடி படம்னு அவங்க எடுத்துருக்கறதால அங்கங்கே காமெடி ஆர்டிஸ்டா போட்டு நிரப்பி வச்சிருக்காங்க. சரி. படத்துல காமெடி இல்லை. கதை இல்லை.
படமாவது படம் மாதிரி இருக்கான்னா அதுவும் இல்லை. படம் ஒரு உப்புமா படம் மாதிரி தான் இருக்கு. அந்தளவுக்கு எந்த ஒரு விஷயத்திலுமே பர்பெக்ஷன் இல்லை. ஒரு பாட்டோ, பைட்டோ, டான்ஸோ எதுவுமே குறிப்பிடும்படி இல்லை. இந்த வருஷம் வந்த படங்களிலேயே ஒரு குறிப்பிடும்படி விஷயமும் இல்லாத குறிப்பிடும்படியான படம்னா அது இதுதான் என்கிறார் புளூசட்டை மாறன்.