Dhootha: பேய் கதையை இப்படிக்கூட சொல்லலாமா? நாக சைதன்யாவின் தூதா வொர்த்தா? வெத்தா?

Dhootha: நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கை மையமாக வைத்து வெளிவந்தாலும் தமிழில் டப் செய்யப்பட்டு பிரைமில் வெளியான வெப்சீரிஸ் தூதா. இந்த வெப்சீரிஸின் பாசிட்டிவ், மைனஸ் பேசும் விமர்சனம் இங்கே.
விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் வெப்சீரிஸ் தூதா. பத்திரிக்கையாளர் சாகரை சுற்றி நடக்கும் திடீர் மர்ம சம்பவங்கள் அடங்கியதுதான் தூதா.
ஒரு பத்திரிகையின் தலைமை எடிட்டராக இருப்பவர் சாகர். இவருக்கு திடீரென அமானுஷயமான விஷயங்கள் நடக்கிறது. இவரின் கார் திடீரென விபத்தாக அது நடப்பதற்கு முன்னதாகவே இவருக்கு ஒரு செய்தித்தாள் துண்டு வர அதில் இந்த விஷயம் முன்னதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில் மர்ம இருப்பதாக நினைக்கிறார். ஒருவேளை தன்னுடைய தொழில் எதிரியான சார்லஸ் இதை செய்து இருப்பாரோ என்ற சந்தேகத்தில் அவரை காண செல்கிறார். அங்கு அவர் ஒரு ரூமில் நிறைய செய்தித்தாள் துண்டுக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு உன்னையும் அது விடாது எனக் கூறி துப்பாக்கியால் சுட்டிக்கொண்டு இறக்கிறார்.
இந்த கொலையை விசாரிக்க வரும் அதிகாரியாக பார்வதி நடித்திருக்கிறார். அவர் இந்த கேஸை விசாரித்து கொண்டு இருக்க ஒரு துப்பு கிடைக்க அதில் சைதன்யா சிக்குகிறார். இந்த கார் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை எஸ்ஐ ரவீந்திர விஜயிடம் விசாரிக்க சொல்கிறார் சைதன்யா.
அவர் அடித்ததில் அவர் இறந்துவிட இவர் தனக்கு தெரியாது என நகர்ந்து கொள்கிறார். எஸ்ஐ அந்த பிணத்தினை அவர் பண்ணை வீட்டில் போட்டு விடுகிறார். சைதன்யா வந்து அந்த பிணத்தினை தனக்கு பக்கத்தில் நிலத்தில் புதைக்கிறார்.
சார்லஸ் இறப்பை விசாரிக்கும் பார்வதிக்கு அந்த டிரைவர் குறித்து தெரிய அவரை தேடும் போது இன்னும் பல மர்மங்களை கண்டுபிடிக்கிறார். இதற்கிடையில் தொடர்ந்து சைதன்யாவுக்கு பேப்பர் கிடைக்கிறது. அதில் முன்னவே இவர் வாழ்வில் நடக்க இருக்கும் விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அவர் யார் எப்படி இது நடக்கிறது என விசாரிக்கும் போது பல வருடம் முன்னர் நேர்மையான பத்திரிக்கையாளரான பசுபதியின் தூதா பத்திரிக்கையை வைத்து ஒரு நேர்மையான அரசியல்வாதியை கொன்ற ஒரு குழுவால் தான் அவர் தற்போது பேயாக வந்து பழி வாங்குகிறார் என தெரிகிறது.

மிரட்டல் பேயாக இல்லாமல் அமானுஷ்யம் நிறைந்த தன்னுடைய பிரிண்டிங் மெஷினை வைத்தே பேய் பழி வாங்குகிறது. ஊழல் பத்திரிக்கையாளரான சைதன்யாவை பழி வாங்கினாலும் கிளைமேக்ஸில் மிகப்பெரிய ட்விஸ்ட்களை இயக்குனர் வைத்திருக்கிறார்.
ஆனால் ஒரு பேய் வெப்சீரிஸ் இப்படி ஒரு திரில்லிங்காக எடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். எங்குமே எதிர்பார்க்க முடியாத காட்சிகள். ஆரம்பத்தில் ஸ்லோவாக தொடங்கினாலும் அடுத்தடுத்த எபிசோட்கள் சூடு பறக்கும். 8 எபிசோட்களை கொண்ட இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் உள்ளது.