திருச்சி சாதனா படம் எடுத்த மாதிரி இருக்கு!.. தேசிங்கு ராஜா 2-வை பொளக்கும் ஃபேன்ஸ்!..

Desingu raja 2: துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்திப்பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில். துவக்கத்தில் சீரியஸான படங்களை இயக்கிய எழில் ஒரு கட்டத்தில் காமெடிக்கு மாறினார்.
தேசிங்கு ராஜாவில்தான் இது துவங்கியது. விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம் புலி, ரவிமரியா, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்து 2013ம் வருடம் வெளிவந்த இந்த படத்தில் அசத்தலான காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் வந்த 2 காட்சிகள்தான் இப்போதும் மீம்ஸ் மெட்டீரியலாக ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
என்ன நடந்தது? என்ன சூழ்நிலை என எதுவும் தெரிந்துகொள்ளாமல் சூரி அவராக ஒன்றை நினைத்து ரவி மரியாவிடம் பேசி அடி வாங்கும் காட்சிகள் எல்லாமே ரசிகர்களை சிரிக்க வைத்தது. ‘மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி’ என ரவி மரியா சொல்வதை இப்போதும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதேபோல், பந்தியில் அமர்ந்துகொண்டு ‘பாயாசம் எங்கடா?’ என சிங்கம் புலி கேட்கும் டெம்ப்ள்டேட் இப்போதும் மீம்ஸ் மெட்டீரியலாக இருக்கிறது. இப்படி ரசிகர்களை சிரிக்க வைத்த தேசிங்கு ராஜாவின் இரண்டாம் பாகத்தை எழில் எடுத்தார். இந்த படத்தில் விமல், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இல்லை. படத்தில் காமெடியே இல்லை என திட்டி வருகிறார்கள். ரசிகர்களை முட்டாள் என நினைத்து படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். புகழ் படத்தில் விமல் நடித்தது போல இருக்கிறது. காமெடி என நினைத்து ஏதேதோ செய்கிறார்கள். தியேட்டரில் யாருக்கும் சிரிப்பு வரவில்லை. அவர்களே சிரித்துக்கொள்கிறார்கள்’ என சொல்கிறார்கள்.

ஒரு பெண் படம் பற்றி சொல்லியபோது ‘எழில் எடுத்த படம் போல இல்லை. திருச்சி சாதனா எடுத்தது போல இருக்கிறது’ என சொல்லி அதிர வைத்திருக்கிறார். படத்திற்கு எதிரான விமர்சனம் வருவதால் தேசிங்கு ராஜா 2 படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடையும் என கணிக்கப்படுகிறது.
Video courtesy to behind talkies