Gamechanger Trailer: ஷங்கர் கூட Unpredictable தான்... இந்தியனில் விட்டதை கேம்சேஞ்சரில் பிடிச்சிட்டாரே!...
Gamechanger Trailer: ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் விடுமுறையில் வெளியாக இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார். தமிழ் ஹீரோக்களை தாண்டி முதல்முறையாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரணை வைத்து இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா, கியாரா அத்வானி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்களின் படப்பிடிப்பிற்கு மட்டுமே 90 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் பிரபல திரைப்படத்தில் முக்கிய இடம் கேம்சேஞ்சருக்கு தான் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் பெரிய போட்டி இல்லாமல் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
எப்போதும் போல ஷங்கரின் பிரம்மாண்ட திரைக்கதை ட்ரைலரையே பிரமிக்க வைத்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் ராம்சரண் நடிப்பும் ஆச்சரியமாக அமைந்திருக்கிறது.
ஆனால் ட்ரெய்லரின் அமைப்பை பார்க்கும் போது இது கண்டிப்பாக முதல்வன் போல ஆக்சன் திரைப்படம் ஆக தான் இருக்கும் என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஓவர் டிராமாட்டிக்காக இல்லாமல் ரியாலிட்டியுடன் பிரம்மாண்டமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரக்கனி ட்ரைலரில் இடம் பெற்று இருப்பதால் அவர்களின் கதாபாத்திரம் தற்போது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
ஏற்கனவே விடாமுயற்சி ரேஸிலிருந்து விலகி விட்டதால் தற்போது கேம் சேஞ்சர் வசூலை குவிக்க மிகப்பெரிய இடம் உருவாகி இருக்கிறது. அந்த நேரத்தில் டிரைலரும் தற்போது ரசிகர்களை ஈர்த்து இருப்பதால் விரைவில் டிக்கெட் விற்பனை அமோகமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.