ஆரம்பமே அள்ளுதே!.. இந்த ஆண்டின் முதல் படம் ஐடென்டிட்டி.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்..
ஐடென்டிட்டி: இந்த வருடத்தின் முதல் திரைப்படமாக ஐடென்டிட்டி என்கின்ற படம் இன்று வெளியாகி இருக்கின்றது. இது ஒரு மலையாள படமாக இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றது. மலையாள சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்தது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இப்படம் வெளியாகி இருக்கின்றது. இந்த டொவினோ தாமஸ், திரிஷா, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் கதை: ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் ஒரு பெண் ஆடை மாற்றுவதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதனை காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறான் ஒருவன். அப்பெண்ணை மிரட்டும் போது ஒருவன் அவன் இருக்கும் இடத்திற்கு தேடி சென்று அவனை கொன்று எரித்து விடுகின்றான். இந்த கேசை பாலோ செய்து வரும் த்ரிஷா நேரில் பார்க்கின்றார்.
அப்போது அந்த செய்தியை தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி ஃபேஸ் பிளைன்ட் என்கின்ற பாதிப்பு த்ரிஷாவுக்கு ஏற்படுகிறது. இந்த கேஸை வினய் விசாரிக்க கதையின் நாயகன் டொவினோ படம் வரையக்கூடிய நபராக என்ட்ரி கொடுக்கின்றார். அவர் உதவியுடன் திரிஷா சொன்ன அந்த கொலை செய்த நபரின் முகத்தை வருகின்றார். ஆனால் அத்தனை அடையாளமும் டொவினோ முகத்துடன் ஒன்றி போக டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் இருக்கின்றது.
இதைத் தொடர்ந்து வினய் பார்வை டொவினோ மீது திரும்புகின்றது. இதனால் சந்தேகம் வலுப்படுகின்றது. இந்த நேரத்தில் ஒருவர் நான்தான் கொலை செய்தேன் என்று ஆஜராக கடைசியில் யார் தான் கொலை செய்தது என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த திரைப்படம்.
திரில்லர் திரைப்படம்: படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த கொலையை யார் செய்தது என்பதை மையமாக வைத்து நகர்கின்றது. முதல் பாதி மிக அருமையாக இருக்கின்றது. இரண்டாவது பாதி முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் தான். படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு நடிகர்களும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அலட்டல் இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
டொவினோ யார் என்பதை படத்தில் அதிகமாக காட்டி இருந்தாலும் அது கதைக்கு தேவையான ஒன்றாகவே இருந்தது. அதிலும் நடிகை திரிஷா பேஸ் பிளைன்ட் பெண்ணாக படம் முழுவதும் குழப்பத்துடனே வலம் வருகின்றார். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக அனைவரையும் படத்திற்கு உள்ளே இழுத்து சென்றாலும், இரண்டாம் பாதியில் சற்று தொய்வை ஏற்படுத்தியிருக்கின்றது.
சில லாஜிக் மீறலும் இந்த திரைப்படத்தில் இருக்கின்றது. இப்படத்தில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் லெவல் தான். அதிலும் பிளைட்டில் வரும் சண்டைக்காட்சி எல்லாம் பிரமாதமாக இருந்தது. படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். இரண்டாம் பாதி முதல் பாதியை காட்டிலும் சுமாராக இருக்கின்றது. இன்னும் சில காட்சிகள் புரியும் படி எடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் திரைப்படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் திரைப்படமாக அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு பலரும் 3.5 ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். இந்த வருடத்தில் வெளியான முதல் திரைப்படமே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்கு ஒரு அருமையான திரைப்படம்.