
latest news
Idli Kadai: தனுஷ் கேரக்டர் ஒரே குழப்பம்… ஆனா உசுருக்கு உத்தரவாதம்!.. புளூசட்டை மாறன் விமர்சனம்…
தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் இட்லி கடை. படத்தைப் பற்றி பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க…
படத்தோட ஹீரோ தனுஷ் வெளிநாட்டுல ஒரு ஓட்டல் நிறுவனத்துல முக்கியமான பொறுப்புல வேலை பார்க்குறாரு. முதலாளியா சத்யராஜ் இருக்காரு. அவருக்கு பையன் அருண்விஜய். அவரது பொண்ணு தனுஷை லவ் பண்றாங்க. நல்ல பையனா இருக்கான்னு சத்யராஜூம் ஒத்துக்குறாரு. ஆனா அருண்விஜய்க்கு உடன்பாடு இல்லை. கல்யாண தேதியும் குறிச்சிடுறாங்க. அந்த நேரத்துல தனுஷோட அப்பா இறந்துடுறாங்கன்னு செய்தி வரவே ஊருக்குப் போயிடுறாரு.
அப்போ தான் அவருக்கு கடைசி காலத்துல நாம அப்பா அம்மா கூட இல்லாம போயிட்டோமேன்னு ரொம்ப ஃபீல் பண்றாரு. அப்போ அப்பா நடத்திய இட்லி கடையை எடுத்து நடத்துறாரு. அந்த சமயத்துல ஒரு பிரச்சனை வருது. அதனால திரும்ப ஊருக்குப் போக முடியாத சூழல். அங்கே அருண்விஜய் கல்யாண தேதி நெருங்கிடுச்சு. உடனே கிளம்பி வான்னு சொல்றாரு. ஆனா தனுஷ் வர முடியாதுன்னு சொல்றாரு. அதுக்கு அப்புறம் அருண்விஜய் ஹீரோவைப் பழி வாங்கினாராங்கறதுதான் கதை.
மேம்போக்கா பார்த்தா இது ஒரு ஹீரோ வில்லன் கதையா இருக்கும். ஆனா ஒரு பிள்ளைக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுத்தா அது எப்படி வளரும்? பாசத்தைக் காட்டுறேன்கற பேருல நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்காம ஊதாரித்தனமா வளர்த்தா அது எப்படி வளரும்னு ஒரு மெசேஜை சொல்ற படம். உண்மைக்கு நெருக்கமா எடுத்ததால ஈசியா கனெக்டாகுது. இளவரசு தனுஷோட பாட்டியை அதாவது அவங்க அம்மாவைப் பார்க்க வர்ற சீன் சூப்பர்.

நித்யா மேனன் இட்லி கடையை ஏன் வித்தேன்னு சண்டை போடற சீன் சூப்பர். ராஜ்கிரண் இறந்த அன்னைக்கு அவங்க வீட்ல மாடு கன்னுக்குட்டி போட்டுரும். அந்தக் கன்னுக்குட்டியை ராஜ்கிரணே மறுபடியும் பிறந்ததாகப் பேசுவாங்க. அது சூப்பர் சீன். சத்யராஜ் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. வசனம் நல்லா இருந்தது. ராஜ்கிரண், தனுஷ் டயலாக் சூப்பர். படத்துலயே குழப்பமான கேரக்டர் தனுஷோடதுதான். அந்தக் கேரக்டர்ல நல்லவன்னு சொன்னா கூட அது தன்னோட சுயநலத்துக்காகவும் அந்த சூழலில் எடுக்குற முடிவாகத் தான் இருக்கு.
மத்தவங்களைப் பத்திக் கவலைப்பட மாட்டேங்குறாரு. லவ் பண்ணிட்டு விட்டுட்டு வந்துடறாரு. இது மட்டும் கொஞ்சம் கவனிச்சிருந்தா நல்லாருந்துருக்கும். அருண்விஜய் வில்லத்தனம் மூணாந்தரமாகத்தான் இருக்கு. படத்துல சில பல குறைகள் இருந்தாலும் தனுஷ்கிட்ட ஒரு முதிர்ச்சி தெரியுது. இ;தை குடும்பப்படமா பார்க்கலாம். யங்ஸ்டர்ஸ் மற்றும் ஜெனரல் ஆடியன்ஸ் பார்த்தாலும் உசுருக்கு ஆபத்து இல்ல அப்படிங்கற மாதிரி ஒரு ஓகே ரகமான படம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.