Kannappa: பொன்னியின் செல்வன் எல்லாம் டுபாக்கூர் படம்...! கண்ணப்பாவைக் கொண்டாடும் புளூசட்டை மாறன்!

கண்ணப்பா படம் நேற்று தெலுங்கில் வெளியானது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், அக்ஷய் குமார், பிரபலாஸ், ப்ரெய்டி முகுந்தன், காஜல் அகர்வால், மோகன் பாபு, சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டீபன் தேவஸீ இசை அமைத்துள்ளார். அருமையோ அருமை. கேமரா நியூசிலாந்தின் இயற்கை அழகை அள்ளித் தந்துள்ளது.
கண்ணப்பா படம் எப்படி இருக்குன்னு பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம். கண்ணப்பா படத்தின் இயக்குனர் முகேஷ் குமார் சீனு. படத்தின் கதை என்னன்னா காளஹஸ்தி பகுதியில் மலைக்கிராமம் இருக்கு. அங்கு வேட்டையாடும் தொழிலை வைத்துள்ளவர்கள் 5 பகுதிகளாகப் பிரிந்து வாழ்கின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஊரில் திருடன்னு ஒரு சின்ன பையன் இருக்கான். அவன் விளையாடும்போது அவன்கூட இருக்குற ஃப்ரண்டைக் கூப்பிட்டு அங்கு ஒரு சாமி கோயில் இருக்கு. அங்க நரபலி கொடுத்தா தான் வம்சம் விருத்தி அடையும்னு சொல்லி அந்த ப்ரண்டை நரபலி கொடுக்கப் போறாங்க. திருடன் அந்த ப்ரண்டைக் காப்பாத்த ஓடுறான். ஆனா அவனால காப்பாத்த முடியல.
அதுக்குள்ள நரபலி கொடுத்துடறாங்க. நண்பனைக் காப்பாத்த முடியல. நரபலி கொடுத்து கொன்னுட்டாங்கன்னு சாமியவே அவரு வெறுக்குறாரு. நாத்திகரா இருக்காரு. ஒரு கட்டத்துல அவன் எப்படி தீவிர சிவபக்தனா மாறுனான்கறதுதான் கதை.
இந்தக் கதையில என்ன சொல்றாங்கன்னா எம்ஜிஆர் படத்துல மாதிரி ஹீரோயினைக் கடத்தி வச்சிக்கிட்டு வலுக்கட்டாயமாகத் தான் இவரை சிவபக்தரா மாத்துறாங்களே தவிர இவரா விரும்பி மாறல. படத்தோட ஆரம்பத்துலயே சொல்றாங்க. இது கண்ணப்பநாயனாரின் பக்தியை சிறப்பிக்கும் விதமா எடுக்கப்பட்டது.

காளஹஸ்தியில எப்படி கோவில் உருவாச்சு? அதைப் பற்றிய படம்தான். சில புனைவுகளுடன் பண்ணியதாக சொல்கிறார்கள். இந்தப் படம் கட்டுக்கதையா இருந்தாலும் சரி. சினிமாவுக்காக மாறுதல் பண்ணினாலும் சரி. படம் எப்படி இருக்குன்னா நிச்சயமா இது ஒரு தரமான படம்னு சொல்லலாம்.
சமீபத்தில் மணிரத்னம் சார் பொன்னியின் செல்வன்னு எவ்வளவு பெரிய டுபாக்கூர் படத்தை எடுத்து நம்ம தலையில கட்டுனாரு? அந்த மாதிரிலாம் இல்லாம படத்துக்கு நேர்மையா என்ன செலவு பண்ணனுமோ அப்படி குவாலிட்டியா கொடுத்துருக்காங்க. படத்தோட லொகேஷன் பிரமாதம்.
டெக்னிகல், கிராபிக்ஸ் எக்ஸ்ட்ராடினரி. பர்ஸ்ட் ஆஃப் கிரிப்பா இருந்தது. செகண்ட் ஆஃப்ல பைட் ரொம்ப எதிர்பார்த்தோம். அது பெரிசா இல்லை. நாத்திகரா இருந்தவரு ஆத்திகரா மாறினது பெரிசா இல்ல. அது நீளமா எடுத்து வச்சிட்டாங்க. செகண்ட் ஆஃப் லேக் தான். இந்த படத்தை கடவுள் நம்பிக்கை உள்ளவங்க பார்த்தாங்கன்னா நிச்சயமா இன்னைக்கு இருக்குற டெக்னாலஜியில ஒரு வித்தியாசமான சாமி படம் பார்த்த திருப்தி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.