கிங்ஸ்டனா? லிவிங்ஸ்டனா?.. கண்றாவி. ஜி.வி. பிரகாஷோட இந்த படமும் போச்சா.. புளூசட்டை பொளந்துட்டாரே!..

by Sankaran |   ( Updated:2025-03-08 03:01:47  )
blue satta, kingston
X

கிங்ஸ்டன் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

மர்மமான முறை: கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் நடித்த கிங்ஸ்டன் படம் நேற்று வெளியானது. படத்தோட கதை என்னன்னா தூத்துக்குடி பக்கத்துல உள்ள மீனவ கிராமத்துல கடலுக்கு மீன்பிடிக்க போறாங்க. அங்கே போறவங்க எல்லாரும் மர்மமான முறையில இறந்துடுறாங்க.


அதனால அங்கே யாருமே மீன்பிடிக்கப் போகாதீங்கன்னு வேலியைப் போட்டுறாங்க. இப்ப உண்மையிலேயே அங்க எதுவும் அமானுஷ்ய சக்தி இருக்கா? வேற எதுவும் விளையாட்டான்னு தெரிஞ்சிக்கணும் அப்படின்னு கடலுக்கு ஹீரோ போறாரு. அவரு திரும்புனாராங்கறதுதான் கதை.

வெறுப்பேத்துற மாதிரி: இந்தப் படம் முழுக்கவே ஒரே குழப்பம். முதல்ல கதை புரியாம 2வது வாட்டி போய் உட்கார்ந்து படம் பார்ப்பான். ஆனா அங்கே ஒருத்தன் எனக்கு புரிஞ்சிட்டுங்கற மாதிரியே கதையை சொல்லிக்கிட்டு இருப்பான். ஆனா அவனையே வெறுப்பேத்துற மாதிரி படத்தை எடுத்து வச்சிருக்காங்க. தெலுங்கு படத்துல எல்லாம் பிளாஷ்பேக் சொல்றதுக்கே சோத்தைப் போட்டு ஒருத்தனை பெரிசா வளர்த்து வச்சிருப்பாங்க.

பிளாஷ்பேக்: அந்த மாதிரி கதையில பிளாஷ்பேக் சொல்றதுக்குன்னு ஒருத்தரை செட் பண்ணிருக்காங்க. பிளாஷ்பேக்கையாவது முழுசா சொல்றாரான்னா அதுவும் கிடையாது. பாதிப் பாதியா சொல்றாரு. கொஞ்சம் நேரம் கழிச்சி மீதி பாதி கதையை சொல்றாங்க.

இப்படியே குழப்பி குழப்பி நம்மளை பைத்தியம் பிடிக்க வச்சிருப்பாங்க. கதைல அவங்களே குழம்பிட்டாங்க. இது புதையல் எடுக்குற படமா? பேய் படமா? பேன்டசி படமான்னு அவங்களே குழம்பி நம்மளையும் சாவடிச்சிட்டாங்க. தூத்துக்குடி பாஷை பேசுறேன்னு சாவடிச்சிட்டாங்க.

கிங்ஸ்டனா? லிவிங்ஸ்டனா?: ஒரு பக்கம் தூத்துக்குடி பாஷை பேசினா இன்னொரு பக்கம் மெட்ராஸ் பாஷையை பேசுறாங்க. உங்களுக்குத்தான் வரலேல்ல. விட்டுருங்களேன். ஏன்டா போட்டு உயிரை எடுக்குறீங்க? இந்தப்படம் ஜிவி பிரகாஷூக்கு 25வது படமாம். எண்ணிக்கையில ஒண்ணு கூடிருக்கு. அதுக்கெல்லாம் போய் தலையைக் கொடுக்க முடியுமா? கிங்ஸ்டனா? லிவிங்ஸ்டனா? கண்றாவி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story