ஓவர் பில்டப்பில் சிக்கி சின்னாபின்னமான கிங்ஸ்டன்... ஜிவி.பிரகாஷூக்கு இதெல்லாம் தேவையா?

by Sankaran |   ( Updated:2025-03-07 12:38:02  )
kingston
X

கிங்ஸ்டன் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு, பில்டப். இதுக்கு காரணம் இது ஜிவி.பிரகாஷூக்கு நடிப்பில் 25வது படம். இந்தப் படத்துக்கு நடித்து இசை அமைத்தும் உள்ளார் ஜிவி.பிரகாஷ். பென்சில், நாச்சியார்னு ஒரு சில படங்கள் பரவாயில்லை ரகங்கள். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள கிங்ஸ்டன்படத்தை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விமர்சிக்கிறார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

கதை: தூத்துக்குடி பக்கத்துல இருக்குற தூவாத்தூர் என்கிற மீனவ கிராமம். இங்கு திடீர்னு கடலுக்குப் போறவங்க எல்லாம் மர்மமான முறையில் இறந்து கரை திரும்புறாங்க. அங்கு கெட்ட ஆவி இருப்பதாக நம்பப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கடலுக்குப் போறவங்க யாரும் திரும்பவே இல்லை. ஒரு கட்டத்துல அரசாங்கம் மீன்பிடிக்க தகுதியற்ற ஊர்னு தடை உத்தரவு போடுது. அந்தக் கிராமமக்கள் என்னதான் செய்வாங்க? பக்கத்து ஊருல போய் மீன்பிடிக்க வரவான்னு கேட்குறாங்க. விரட்டி விட்டுடறாங்க.


நிறைய பசங்க கடத்தல் தொழில்ல இறங்குறாங்க. கடல் அட்டையைக் கடத்துறாங்க. அந்தக் குழுவுக்கு ஒரு கேங்ஸ்டர் இருக்காரு. அவரோட வலது கைதான் கிங்ஸ்டன். ஒரு கட்டத்தில் இவருக்கும் தகராறு வருகிறது. இந்தநிலையில் தடைசெய்யப்பட்ட இடத்தில் போய் மீன் பிடித்தால் என்னன்னு கிங்ஸ்டனும் அவனது நண்பர்களும் போறாங்க. அவங்க உயிரோடு திரும்பினாங்களாங்கறதுதான் கதை.

ஓவர் பில்டப்: இதே மாதிரி கதையை சொல்லிருந்தா ஈசியா மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். மாத்தி மாத்தி புரட்டி புரட்டி எடுத்துருக்காங்க. ஓபனிங் சீன்ல ஜிவி பிரகாஷூக்கு இந்த ஓவர் பில்டப் தேவையா?

நம்ம பாடிக்கு எந்தக் கேரக்டர் ஒர்க் ஆகும்? யாரு எந்த டைரக்டர் சரியா கொண்டு போவாங்கன்னு தெரியணும். இதை ஹீரோவா இருக்குற இவங்க தெரியக்கூடாதா? டப்பிங் பேசும்போது கூடத் தெரிஞ்சிருக்காதா? அது அவரோட ஆசை. சொந்தப் படம் வேற.

குழப்பம்: இது வந்து மீனவர்கள் சம்பந்தப்பட்ட கதையா? பேய், அமானுஷ்ய கதையா? கடத்தல் கதையான்னு குழப்பமே வருது. பர்ஸ்ட் ஆப் ஓகே. செகண்ட் ஆப்ல பேயைக் கொண்டு வர்றாங்க. ஒரு இடத்துல கூட பயமே வரல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story