படத்தை சீரியல் மாதிரியா எடுப்பாங்க? லவ் மேரேஜை பொளந்து கட்டும் புளூசட்டை மாறன்

விக்ரம்பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ் உள்பட பலர் நடித்துள்ள படம் லவ் மேரேஜ். நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் அசோக வனம்லோ அர்ஜூனா கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.
லவ் மேரேஜ் படத்தின் இயக்குனர் ஷண்முகப்பிரியன். படத்தின் ஹீரோவுக்கு 33 வயசாகியும் கல்யாணம் ஆகாம இருக்கு. அவரைப் பார்க்கறவங்க எல்லாம் இன்னும் கல்யாணம் ஆகலையான்னு கேட்டு உயிரை எடுக்குறாங்க. நானாடா கல்யாணம் பண்ண மாட்டேங்குறேன்.? எவன்டா பொண்ணு கொடுக்குறான்கற சூழலுக்கு அவரோட நிலைமை இருக்கு.
அவருக்கு ஒரு பொண்ணைப் பார்க்கப் போறாங்க. சொந்தக்காரங்களோட பொண்ணைப் போய் பார்த்து நிச்சயதார்த்தம் பண்ணப் போறாங்க. இன்னையில இருந்து கொரோனா லாக் டவுன்னு சொல்லிடுறாங்க. அம்மா 'இங்க தங்க வேணாம்டா. நாளைக்கு ஏதாவது ஒரு கோளாறு பண்ணி கல்யாணத்தை நிப்பாட்டிடுவாங்கடா. ஏற்கனவே தள்ளிப் போயிடுச்சு'ன்னு சொல்றாங்க. ஆனா ஹீரோ கேட்காம விட்டுறாரு. அங்கு தங்க வேண்டிய சூழல். திடீர்னு கல்யாணப் பொண்ணு காணாமப் போயிடுது. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இது ஒரு தெலுங்குபட கதை.
ஒரு கல்யாண வீடுன்னா மாமனாரு, மாமியாரு, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, ப்ரண்ட்ஸ்னு எவ்வளவோ கேரக்டர்ஸ் இருக்கும். அதை எல்லாம் சேர்த்து அதுல இருந்து சுவாரசியமான கேரக்டர்களை மட்டும் கொஞ்சம் கொஞ்ச நேரம் செலவழிச்சி காட்சிகளை வச்சாலே படம் முழுக்க நல்ல கலகலப்பும், காமெடியுமா இருக்கும். இந்தப் படத்துல அப்படி எந்த ஒரு கேரக்டரையும் இன்ட்ரஸ்டிங்காக வைக்கல.

இந்த ஒட்டுமொத்த படத்துலயே கல்யாணப் பொண்ணுக்கு ஒரு தங்கச்சி கேரக்டர் வரும். அந்த ஒரு கேரக்டர் தவிர வேறு எந்த ஒரு கேரக்டரையும் ஒழுங்காவே வடிவமைக்கல. ஹீரோ கேரக்டர் கல்யாணப் பொண்ணு காணாமப் போச்சுன்ன உடனே அங்கிருந்துதான் அந்தக் கேரக்டருக்கு வேல்யுவே வருது. அந்தக் கேரக்டர் மேல எல்லாருக்கும் ஒரு இரக்கம் வரணும். அந்தக் கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்கணும்.
அப்படி எந்த ஒரு வேலையையுமே அந்தக் கேரக்டர் செய்யவே இல்லை. படத்தோட மெயின் கேரக்டரையே ஒழுங்கா டிசைன் பண்ணாததுனாலே மொத்த கதையுமே ஆட்டம் கண்டுபோச்சு. இந்தக் கதையே சுமாரான படம் கொடுக்குறதுக்குப் போதுமானதுதான். இந்தக் கதையில கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியஸ்.
கொஞ்சம் எமோஷன்ஸ். பாட்டு, காமெடின்னு கலர்ஃபுல்லான படமா பண்ணிருந்தாங்கன்னா நிச்சயமா இது குறைந்தபட்சமான படமாவாவது வந்துருக்கும். இப்போ இதுல எந்த சுவாரசியமும் இல்லாம ப்ளாட்டா ஒரு கதையை வச்சி சீரியல் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.