திரைக்கதையில் கோட்டை விட்ட மாமன்... சென்டிமென்ட் மட்டும் போதுமா? சூரிதான் தெரியறாரு..!

by SANKARAN |   ( Updated:2025-05-16 03:20:42  )
maaman
X

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, பாலா சரவணன் உள்பட பலர் நடித்துள்ள படம் மாமன். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்தப் படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா...

தனது அக்கா குழந்தையைத் தன் குழந்தையை விட மேலாக நேசித்து வளர்க்கிறார் சூரி. தாயை விட ஒரு படி மேலாக வளர்த்து வருகிறார். குழந்தையை ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போறது என எல்லா விஷயங்களும் பண்ணுகிறார். வழக்கமா குடும்பத்தில என்னென்ன பிரச்சனை வருமோ அப்படி இங்கும் வருகிறது. அக்கா குடும்பத்துடன் எப்படி விரிசல் விழுகிறது? அதை சூரி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் மாமன் படம்.

சூரியின் நடிப்பு அபாரம். கருடன், கொட்டுக்காளி, விடுதலை படங்களே இதற்கு சாட்சி. ஐஸ்வர்யா லட்சுமிக்கு அழுத்தமான கேரக்டர். ராஜ்கிரண் இருந்தும் அவரு கேரக்டர் அவ்வளவு அழுத்தம் இல்லாமல் உள்ளது. இது ஃபேம்லி சென்டிமென்ட் கதை. தாய்மாமன் உறவு என்பது இன்னொரு தாய்க்குச் சமமான உறவு.


இன்னும் எத்தனை இடங்களில் இந்த உறவைப் பாசத்தோடு கடைபிடிக்கிறாங்கன்னு தெரியல. அதனால இது இப்போ சமூகத்துக்குத் தேவையான படம்தான். திரைக்கதையில் தான் கோட்டை விட்டுட்டாங்க. படம் முழுக்க ஒரே சென்டிமென்டாகத் தான் இருக்கு. கதை எழுதியவர் சூரி. ஆனா திரைக்கதையில் கோட்டை விட்டது பெரிய பலவீனம். பாடல்கள் மனசில நிற்கல. எடிட்டிங் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். படம் ரொம்ப ஸ்லோவாகப் போகுது. சூரி நடிப்பு சூப்பர். இதுதான் பிளஸ்.

மற்ற நடிகர்கள் யாரையுமே பெரிய அளவில் படத்தில் ஒன்றிப் பார்க்க முடியுமான்னா கேள்விக்குறியாகத்தான் இருக்கு. விலங்கு என்ற படத்தைக் கொடுத்த இயக்குனர் இந்தப் படத்தையும் அப்படி எடுத்துருப்பாருன்னு நினைச்சா மிஸ்ஸிங் தான். சென்டிமென்டால் பிழிஞ்சி ரசிகர்களை வாட்டி வதைக்கிறாங்க. மொத்தத்தில் தாய்மாமன் கொடுத்த சீர்வரிசை கம்மிதான்.

Next Story