மறதி நோயில் வடிவேலு!.. திருடனாக பகத் பாசில்!.. மாரீசன் டிரெய்லர் விமர்சனம்!....

Maareesan Trailer: காமெடி வேடங்களில் கலக்கி வந்த வந்த வடிவேலு இப்போது சீரியஸான கதைகளிலும் நடிக்க துவங்கியிருக்கிறார். மாமன்னன் படம் அதை துவங்கி வைத்தது. அந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பு பாராட்டை பெற்றது. ஒருபக்கம், அவரின் காமெடி இப்போது வொர்க் அவுட் ஆவதில்லை. சுந்தர்.சியுடன் இணைந்து அவர் நடித்த கேங்கர்ஸ் படமும் ஓடவில்லை.
இந்நிலையில், மீண்டும் பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் என்கிற படத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். இதுவும் ஒரு சீரியஸான படமாகவே உருவாகியுள்ளது. இப்படத்தை சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். இரண்டு பேரின் பயணத்தை இப்படம் பேசுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.
வடிவேலுவுக்கு மறதி நோய். கொஞ்ச நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார். அவர் வைத்திருக்கும் பையில் நிறைய பணம் இருக்கிறது. அதை தெரிந்துகொண்ட பகத் பாசில் அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறார். திருச்செந்தூரில் திருவண்ணாமலைக்கு செல்ல பேருந்துக்காக நிற்கும் வடிவேலுவிடம் ‘வாங்க.. பைக்கில் போவோம்’ என சொல்லி அழைத்து போகிறார் பகத் பாசில் அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது?. பகத் பாசில் அந்த பணத்தை திருடினாரா என்பதுதான் படத்தின் கதை.

டிரெய்லர் துவங்கும் போதே ‘என்னை வா என கூப்பிடும் வீட்டுக்கு மட்டுமே நான் திருட போவேன். வானத்தில் பறக்கும் கொக்குக்கு தண்ணீருக்கு அடியில் இருக்கும் மீன் எப்படி உணவாகிறது என நான் அடிக்கடி யோசிப்பேன். இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு’ என பகத் பாசில் பேசும் வசனம் அந்த கதாபாத்திரத்தை நியாயப்படுத்துகிறது.
‘எனக்கு பயமாக இருக்கு. ஒருநாள் என்னையே நான் மறந்துவிடுவேனோ’ என வடிவேலு பேசும் வசனம் அந்த கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தை வரவைக்கிறது. வடிவேலுவிடம் இருக்கும் பணத்தை எப்படியாவது அடித்துவிட பஹத்பாசில் திட்டம்போட, ஒருபக்கம் போலீஸ் பகத்பாசிலை பிடிக்க முயற்சிக்கிறது. எமோஷனல் கலந்து பரபரப்பாகவே படம் போகும் என்பது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா சிறப்பான பின்னனி இசை அமைத்திருக்கிறார். அது டிரெய்லரிலேயே தெரிகிறது.
டிரெய்லரில் வடிவேலு, பகத் பாசிலை தவிர வேறு பெரிய நடிகர்கள் காட்டப்படவில்லை. வழக்கமாக காமெடி செய்யும் கோவை சரளா இந்த படத்தில் பகத் பாசிலை பிடிக்க முயற்சி செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர்கள் மூவருக்கும் இடையேதான் படம் சுழலும் என்பது டிரெய்லரை பார்க்குபோது புரிகிறது. மாரீசன் படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது.