பேக்ரவுண்டு மியூசிக் இல்லாமலயே மிரட்டிட்டாங்க!.. மர்மர் படம் பார்த்த ரசிகர்கள் சொல்வது என்ன?...

by Sankaran |   ( Updated:2025-03-07 01:50:01  )
murmur
X

சமீபகாலமாக தமிழ்சினிமாவில் திரில்லர் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் அகத்தியா, சப்தம் ஆகிய படங்கள் வந்தன. அந்த வகையில் மர்மர் என்ற திரில்லர் படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. ஹேமந்த்நாராயணன் இயக்கத்தில் இந்தப் படம் ஹாரர் வரிசையில் ரொம்பவே வித்தியாசமாக வந்துள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்னு பார்க்கலாமா...

சவுண்டுலயே பயமுறுத்திட்டாங்க: படம் பார்த்தேன். சீட்டே பயத்தைக் கொடுத்துடுச்சு. ஹாரர்லயே இது அல்டிமேட் பயம். பேயைக் காட்டுறதுல இது வேற மாதிரி இருக்கு என்கிறார் ஒருவர். இன்னொருவர் சவுண்டுலயே பயமுறுத்திட்டாங்க. ஒளிப்பதிவு அல்டிமேட். இந்தப் படத்தைக் கண்டிப்பா பார்க்கணும். எனக்குத் தெரிஞ்சி பேயை டைரக்டா காட்டிருந்தா கூட இவ்ளோ பயம் இருக்காது என்கிறார்.

பேய் படம்: மற்றொரு ரசிகர் நாலு பேயும் எங்க கூடவே வருற மாதிரி இருந்தது. பட்ஜெட் இல்லன்னாலும் நல்ல படம் என்கிறார். ரசிகை ஒருவர் நான் பேய் படம்னாலே பயப்பட மாட்டேன். இந்தப் படத்தைப் பார்த்ததும் பயந்துட்டேன் என பயந்தபடி சொல்கிறார்.

எல்லா மூவிலயும் மியூசிக் இருக்கும். அது இல்லாமல் திடீர் திடீர்னு சவுண்டு வரும்போது பயமா இருக்கும். 10வருஷத்துக்கு முன்னாடி கன்னடத்துல இப்படி ஒரு படம் வந்தது. தமிழ்ல இப்போதான் வந்துருக்கு. நாலு பேரு காட்டுக்குள்ள போனா எப்படி இருக்கும்? அந்த எக்ஸ்பிரீயன்ஸ் செமயா இருக்கு. எல்லாமே ரியலா இருக்குன்னு ஒரு ரசிகை சிலாகித்தபடி சொல்கிறார்.


இளம் ரசிகை ஒருவர் இப்படி சொல்கிறார். இந்தமாதிரி சின்ன பட்ஜெட்ல நல்ல ஒரு கன்டென்ட் இருக்கணும். நான் வீட்டுக்குப் போய் நைட் எப்படித் தூங்கப் போறேன்னு தெரியல என்கிறார். இந்தப் படம் எல்லாருக்குமே ஒரு நல்ல இன்ஸ்பயரேஷனா இருக்கும்.

ரொம்ப அருமை: எதுவுமே இல்லாம டைரக்ஷன் பண்ணனும்கற கனவு மட்டும் இருந்து இப்படியும் பண்ணலாம்னு யோசிச்சி பண்ணிருக்காங்க. ரொம்ப அருமையா இருக்கு என்கிறார் ஒரு ரசிகர். அதே நேரம் ரசிகை ஒருவர் சவுண்ட் எபெக்ட் இருந்ததனாலத்தான் படத்து உள்ளேயே இருந்த மாதிரி இருந்துச்சு. இடைவேளை சீனும், கிளைமாக்ஸ் சீனும் மாஸா இருக்கு என்கிறார்.

20 நிமிட கிளைமாக்ஸ்: இதை நார்மலான பிலிமா பார்க்காதீங்க. ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்தப் படம் மற்ற படங்கள் மாதிரி இருக்காது. முதல்ல இருந்தே திரில்லிங் தான். பயப்படாதவங்க கூட இந்தப் படத்தைப் பார்த்துப் பயந்துடுவாங்க. கடைசி 20 நிமிட கிளைமாக்ஸ் ரொம்ப பயமா இருந்துச்சு. பேக்ரவுண்டு மியூசிக் இல்ல. காமெடி, ரொமான்ஸ், பயம்னு எல்லாமே இருந்துச்சு என்கிறார்கள்.

Next Story