Narivettai: நோ இன்வெஸ்டிகேஷன்… ஆனா போலீஸ் படம்… டோவினோ தாமஸின் நரிவேட்டை எப்படி இருக்கு்?

Narivettai முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் நரி வேட்டை திரைப்படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் பேசும் திரை விமர்சனம் இங்கே.
அரசு மற்றும் அதிகாரிகளால் பாதிக்கப்படும் பழங்குடி சமூகத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் நரிவேட்டை. மலையாள சினிமா உலகில் இப்படி ஒரு ஜானர் திரைப்படங்கள் வெளிவருவது அரிதுதான்.
அதிலும் பெரும்பாலும் இன்வெஸ்டிகேட்டிவ் ஜானர் படங்களில் நடிக்கும் டோவினோ தாமஸ் இப்படத்தினை தேர்வு செய்ததற்கே சபாஷ் போடலாம். தேவையான இடங்களில் எமோஷனல் மற்றும் அதிரடியாக நடித்து தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பை காவந்து பண்ணி இருக்கிறார்.
இவரின் மேலதிகாரியாக வரும் சேரன் அடடா எண்ட்ரி தான். முதல் மலையாள படம் என்றாலும் படத்தில் அவருடைய பங்கை சரியாக செய்து விடுகிறார். இன்னொரு பலம் சூராஜ் வெஞ்சரமூடு. நடிப்பில் ஏற்ற இறக்கங்களை சரியாக அமைத்து பலம் சேர்த்து இருக்கிறார்.

படம் முதல் பாதி ரொம்பவே மெதுவாக சென்று சோதித்தாலும் இண்டவெலுக்கு முன்னரே ஸ்பீட் எடுத்துவிடுகிறது. திரைக்கதையில் இன்னும் சில தவறுகளை இயக்குனர் அனுராஜ் மனோகர் சரி செய்து இருந்தால் படம் அசரடித்து இருக்கும் என்பதே உண்மை.
மலையாள சினிமாவிற்கு முக்கியம் பின்னணி இசை. அதை சரியாக செய்து காப்பாத்தி இருக்கிறார் ஜேக்ஸ் பிஜோய். விஜய்யின் சரியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.