எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?.. அல்லது படுகுழியில் தள்ளியதா?.. ஸ்குவிட் கேம் சீசன் 3 எப்படி?

by SARANYA |
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?.. அல்லது படுகுழியில் தள்ளியதா?.. ஸ்குவிட் கேம் சீசன் 3 எப்படி?
X

தென் கொரிய இயக்குனர் ஹுவாங் டாங் ஹுயூக் இயக்கத்தில் முதல் 2 சீசன்களிலும் கலக்கிய நம்ம லீ ஜுங் ஜே கடந்த சீசனில் வில்லன் கையால் குண்டடி பட்டு செத்துப் போயிட்டான் என ரசிகர்களே நம்பாத நிலையில், இந்த சீசன் ஆரம்பத்திலேயே அவனுக்கு உயிர் பிச்சைக் கொடுத்து மீண்டும் போட்டியில் விளையாட வைக்கின்றனர்.

கடைசியாக உள்ள போட்டியாளர்கள் மற்றும் முக்கிய நடிகர்கள் எல்லாம் ஒவ்வொருவராக இந்த சீசனிலும் அடுத்தடுத்து விளையாட்டுகளை விளையாண்டு உயிரை இழக்க நேரிடுகிறது. என்னப்பா முதல்ல இருந்தா என முதல் சீசன் போலவே கேம் போகுதே, இந்த சீசன் போலீஸ் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் போல ஆக்‌ஷன் காட்சிகளுடன் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட காட்சிகள் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன.


கத்தியும் சாவியும் என முதல் எபிசோடிலேயே போட்டியாளர்கள் கைகளில் கத்தியை கொடுத்து சாவி வைத்திருக்கும் அணியினரை கொன்றால் தான் அடுத்த ரவுண்டுக்கு செல்ல முடியும் என இந்த வெப்சீரிஸ் முழுக்க ஹிட் 3, மார்கோ படங்களை விட ரத்தக் களறியாக ஒய் திஸ் கொலவெறியாகவே செல்கிறது.

ஒவ்வொருமுறையும் பணத்துக்காக ஒருவர் இன்னொருவரை கொலை செய்யும் காட்சிகளை எல்லாம் இன்றைய இளைஞர்கள் பார்த்தால், திருந்த எல்லாம் மாட்டார்கள், இதே பாணியில் அடுத்தவனை எப்படி போட்டுத் தள்ளலாம் என்றும் சாகடித்தால் தான் அடுத்தடுத்து முன்னேற முடியும் என்கிற கற்பிதங்களே இந்த சீசன் நிறைய இடங்களில் வலியுறுத்துவதே இந்த வெப்சீரிஸுக்கு சரியான மூடு விழாவாக மாறிவிட்டது.

கடைசியில், ஹீரோவுக்கு ஏற்படும் முடிவை எல்லாம் ரசிகர்களால் கொஞ்சம் கூட ஜீரணித்துக் கொள்ளவே முடியாத வகையில், இயக்குனர் எப்படியாவது இதுக்கு மேல இந்த வெப்சீரிஸ் சீசனை தொடராமல் புதுசா ஏதாவது ஒன்று செய்யலாம் என முடிவெடுத்துவிட்டாரா என தெரியவில்லை. ஆனால், நெட்பிளிக்ஸ் இதை அப்படியே தென் கொரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்வது போல போஸ்ட் கிரெடிட் சீனை எல்லாம் வைத்து முடித்துள்ள நிலையில், அடுத்த சீசனும் வர அதிக வாய்ப்பே இருப்பதாக தெரிகிறது. இந்த வாரம் வீக்கெண்டை வீட்டில் இருந்தபடியே ஜாலியாக என்ஜாய் பண்ண வேண்டும் என்றால் இந்த 3வது சீசனை தவிர்த்துவிடுவது நல்லது. ஏற்கனவே 2 சீசன்களை பார்த்துவிட்டேன் என்பவர்களுக்கு வேற ஆப்ஷனே இல்லை இதையும் அனுபவியுங்கள்.

Next Story