பிரதீப் ரங்கநாதன் தெறி!.. தரமான இண்டர்வெல் பிளாக் டிவிஸ்ட்!.. டிராகன் டிவிட்டர் விமர்சனம்!..

Dragaon Review: கோமாளி படத்தை இயக்கிவிட்டு சில வருடங்கள் கழித்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம்தான் டிராகன். இந்த படம் இன்று காலை 9 மணிக்கு தமிழத்தில் வெளியானது. இந்த படத்தை பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். வாங்க பார்ப்போம்.

முதல் பாதி அருமையாக இருக்கிறது. பிரதீப் தாறுமாறான நடிப்பு.. காலேஜ் மாணவர் மற்றும் அலுவகத்தில் வேலை செய்பவர் என இரண்டிலும் கலக்கி இருக்கிறர். அனுபமா பரமேஸ்வரன் கிளாமர் காட்டி சூடேத்துகிறார். கயடு லோஹர் அழகாக தேவதை போல இருக்கிறார். கதை, திரைக்கதை என இரண்டையும் சுவராஸ்யமாக எழுதியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. படத்தின் விஸ்வல் மற்றும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. லியோன் ஜேம்ஸின் இசையில் 3 பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. இண்டர்வெல் பிளக்கில் டிராகன் வருகிறது என படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு ஒருவர் பாராட்டியுள்ளார்.

இந்த படத்திற்கு ஐந்துக்கு ஐந்து மார்க் கொடுத்துள்ள ஒருவர் ‘இந்த படத்தில் வருவது போல சம்பவம் எல்லோரின் வாழ்விலும் நடக்கும். அனுபமாவும், கயடு லோஹரும் இந்த கதாபத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. இந்த படத்தின் கதை, திரைக்கதை அஸ்வத் மாரிமுத்து மிகவும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். முதல் அரை மணி நேரமும், கடைசி ஒரு மணி நேரமும் அற்புதம். படத்தில் சில நடிகர்கள் கேமியோவாக வருகிறார்கள். லவ் டுடே படத்திற்கு பின் மீண்டும் ஒரு ஹீரோவாக நிரூபித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், படம் பக்கா என்கேஜான பொழுது போக்கு திரைப்படம். பிரதீப் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜார்ஜ் மரியன் மற்றும் மிஷ்கினின் கதாபாத்திரங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் காமெடி காட்சிகள் சிறப்பு. அஸ்வத் மாரிமுத்து அடுத்து பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்துவிட்டார் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மிகவும் பொறுப்பான, ஜனரஞ்சகமான சிறப்பான பொழுதுபோக்கு திரைப்படம். மற்ற இயக்குனர்கள் சீரியஸாக எடுத்திருப்பார்கள். ஆனால், அஸ்வத் மாரிமுத்து இந்த கதையை ஜாலியான படமாக கொடுத்திருப்பது அவரின் திறமை. இந்த படம் ஒரு அஸ்வத் மாரிமுத்து சம்பவம்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
படம் பார்த்த பலரும் இப்படத்தை பாராட்டி ‘கண்டிப்பாக பிளாக்பஸ்டர்’ என சொல்வதால் இந்த படம் சூப்பர் ஹிட் என்பது உறுதியாகியுள்ளது.