NEEK படத்திலிருந்து வெளியான 'புள்ள' பாடல்!.. எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..
Actor Dhanush: தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். அதிலும் ராயன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷுக்கு நிற்க கூட நேரமில்லை என்றே கூறலாம், அந்த அளவுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வைத்திருக்கின்றார்.
தனுஷ் லைன்அப்: ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் தயாரிக்கவும் செய்திருக்கின்றார். அதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது.
இது இரண்டுமே இவர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள். இது இல்லாமல் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் பச்சை முத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க போவதாக கூறப்பட்டு வருகின்றது. இது இல்லாமல் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் ஏகப்பட்ட திரைப்படங்களை கமிட் செய்து வைத்திருக்கின்றார் நடிகர் தனுஷ்.
NEEK படம்: நடிகர் தனுஷ் இளம் நடிகர்களை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம். இந்த திரைப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாக இருக்கின்றார். மேலும் அவருடன் இணைந்து அனிகா சுரேந்திரன், பிரியா, மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்திருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. அதிலும் முதலில் வெளியான கோல்டன் ஸ்பேரோ என்கின்ற பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றது.
புள்ள பாடல்: இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் எழுதியிருக்கும் 'உன் கூட சேர்ந்தால் போதும் புள்ள' என்கின்ற பாடல் வெளியாகி இருக்கின்றது. முதலாவது பாடல் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் துள்ளலாக இருந்த நிலையில், இரண்டாவது பாடல் காதலில் தோற்றவர்களுக்காக எழுதப்பட்டது போன்று இருந்தது. மூன்றாவதாக ஏண்டி என ஒரு காதல் பாடல் வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் பாடல் காதல் பிரிவுக்கு பிறகு மீண்டும் சேர வேண்டும் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த பாடலும் நிச்சயம் மற்ற மூன்று பாடல்களை போல மிகப் பெரிய வெற்றி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.