OTT Watch: சிபிராஜ் டென் ஹவர்ஸ் ஓவர் பில்டப் மட்டும் தான்… உள்ளே நமத்து போய் இருக்கே!

OTT Watch: தமிழ் சினிமாவில் சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான திரைப்படன் டென் ஹவர்ஸ். தற்போது அமேசானுக்கு வந்திருக்கும் இப்படத்தின் பிளஸ் மைனஸ் பேசும் விரிவான திரை விமர்சனம் இங்கே.
3 வருடங்களுக்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தினை இளையராஜா கலியபெருமாள் இயக்கி இருக்கிறார். ஆத்தூரில் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கும் சிபிராஜ் ரொம்ப நேர்மையாக இருப்பவர். இவர் ஏரியாவில் திடீரென ஒரு பெண் காணாமல் போன வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
அதே நேரத்தில் திடீரென ஒரு பேருந்தில் பெண் ஒருவர் சித்ரவதை செய்யப்படுவதாக தகவல் வர, உடனே சிபிராஜ் துரிதமாக செயல்பட்டு அந்த பேருந்தை வழிமறித்து சோதனை செய்கிறார். அப்படி செய்யும்போது அப்டி ஏதும் சம்பவம் நடக்கவில்லை என தெரியவருகிறது.
ஆனாலும் இந்த புகாரை போலீஸுக்கு கொடுத்த இளைஞர் திடீரென கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். அவனை கொலை செய்தது யார் என்ற கேள்விக்கும், சித்ரவதை செய்யப்பட்டதாக கூறும் பெண்ணின் பின்புலன் மற்றும் காணாமல் போன பெண் யார்? என்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை.
வித்தியாசமான கதை என்றாலும் அதை சரியாக இயக்குவதில் இயக்குனர் சொதப்பி இருக்கிறார். நிறைய லாஜிக் மீறல்கள் படத்தில் இருக்கிறது. சிபிராஜ் எப்பையும் போல தன்னுடைய நடிப்பில் அசத்தி விடுகிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.
கிளைமேக்ஸ் கச்சிதமாக அமைந்து இருக்கிறது. முக்கியமாக படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலமாக இருக்கிறது. சிபிராஜிக்கு சொல்லப்பட்ட பிளாஷ்பேக் கச்சிதமாக அமைந்து இருக்கிறது. ஆனால் படத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளும் உள்ளது.
முதல் பாதியின் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு அடுக்கடுக்கான சம்பவத்தால் களைகட்டினாலும் அடுத்த ஒரு மணி நேரம் காணாமல் போகிறது. இருந்தும் இரண்டாம் பகுதி சற்று தூக்கி நிறுத்துகிறது. விடிந்தால் தேர்தல் முடிவு வரும் நிலையில், ரௌடிகள் போலீசை கொலை செய்ய கடைசியில் ஒரு போலீஸ் மட்டும் இருக்கும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை.
அதுபோல படத்தின் ஆரம்ப காட்சியான பெண் காணாமல் போகும் சம்பவம் போக போக மறக்கடிக்கப்படுவதே படத்தின் மிகப்பெரிய மைனஸாகி விடுகிறது. இருந்தாலும் அமேசான் பிரைமில் ஒருமுறை பார்க்கலாம்.