நின்னு விளையாடும் பெருசு...! படத்தைப் பார்க்க இந்த ஒரு விஷயம் போதும் போலயே!

by Sankaran |   ( Updated:2025-03-14 06:31:52  )
perusu
X

இளங்கோ ராம் இயக்கியுள்ள பெருசு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி உள்ள இந்தப் படம் போகப் போக நல்ல பிக்கப் ஆகும் என்றே தெரிகிறது. ஏன்னா படத்தோட கதை அப்படி. ஜாலியா கொண்டு போயிருக்காங்கப்பா.

பெருசு ஒரு அடல்ட்ஸ் ஒன்லி படம்தான். ஏ படம். அப்படி சொன்ன உடனே ஆபாச வசனங்களும், காட்சிகளும், இச்சையைத் தூண்டுற மாதிரியான விஷயங்களும் வரும். அதே மாதிரி வன்முறையைத் தூண்டுற வசனங்கள், ரத்தம் பீறிட்டுத் தெறிக்கிற காட்சிகளும் வரும் என்றுதான் நினைப்போம். ஆனால் பெருசு படத்துல அந்த மாதிரியான எந்த காட்சியும் கிடையாது. அப்படின்னா பெருசு படத்தோட கதைதான் என்னன்னு கேட்குறீங்களா?

ஊரே மதிக்கிற பெரியவர் ஒருவர் அவரைத்தான் பெருசுன்னு சொல்றாங்க. ஏன்னா அவரு பண்ற சேட்டை அப்படி. அவருக்குக் கொஞ்சம் சபலம். அதுக்கு மாத்திரை போட்டா நின்னு விளையாடும்னு ஐடியா கொடுக்குறாங்க. அதுமாதிரி அவரும் போட்டுடறாரு. ஆனா அவரு வயசுக்குப் பாடி தாங்கல. ஆள் அவுட் ஆகிடுறாரு.

ஆனா அது மட்டும் நிக்குது. அங்க தான் பெருசு நிக்கிறாரு. யாரும் இருக்குற வரைக்கும்தான புகழ்ந்து பேசுவாங்க. அப்புறம் அவரு போனதுக்கு அப்புறம் என்னா ஆட்டம் போட்டாரு. இப்ப பிளாட் ஆகிட்டாரு பார்த்தியான்னு சொல்றாங்க. அதுதான் பெருசு படத்தோட கதை.


போனவாரம் எமகாதகி என்கிற படம் சிந்திக்க வைத்தது. இந்தவாரம் பெருசு படம் ஜாலியா போகுது. நம்மளை சிரிக்க வைக்குது. சில படங்கள்ல மூத்த மகனுக்கும் அப்பாவும் செட்டே ஆகாது. தூரத்துல அப்பா வர்றாருன்னா இவன் அப்படியே சுத்திப் போயிடுவான்.

ஆனா அப்பாவுக்கு மூத்தமகன்னாலே பாசம் ஜாஸ்தி. இந்த மாதிரி படத்துல நிறைய கனெக்ட் பண்ற சீன்கள் படத்துல இருக்கு. பாலசரவணன், வைபவ், முண்டாசுப்பட்டி முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோரது நடிப்பு பட்டையைக் கிளப்புது.

Next Story