சப்தம் காது வலிக்குதுப்பா… ஆதி அண்ணா கொஞ்சம் ப்ளீஸ்… திரை விமர்சனம் இதோ!

Sabdham: ஈரம் படத்தினை தொடர்ந்து ஆதி மற்றும் அறிவழகன் கூட்டணி அமைத்து இருக்கும் சப்தம் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இதன் திரை விமர்சனம் இதோ!
ஆதி ஆவிகளை கண்டறியும் சப்த நிபுணராக பணி புரிந்து வருகிறார். மும்பையில் தங்கி வேலை செய்து வரும் ஆதி அங்கு இருக்கும் அமானுஷ்ய விஷயங்களை தன்னுடைய வேலையின் மூலம் சரி செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அவருக்கு ஒரு கால் வருகிறது.
மூணாறில் பெண்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆவிகளின் நடமாட்டம் காரணமா என கண்டுபிடிக்க அவரை அழைக்கின்றனர். அங்கு சென்ற ஆதி எப்படி அதை கண்டுபிடித்தார்.. அந்த பிரச்சினைகளில் இருந்து அவர் எப்படி வெளியேறினார் என்பதுதான் கதை.

இயக்குனர் அறிவழகன் இதற்கு முன் ஆதியுடன் இணைந்து ஈரம் திரைப்படத்தில் பணிபுரிந்து இருக்கிறார். அத்திரைப்படம் காதல் கதையாக தொடங்கி பின்னர் திகிலூட்டும் ஹாரர் திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதே கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடமிருந்தது. ஆனாலும் பல இடங்களில் அந்த எதிர்பார்ப்பை கூட்டணி தவறவிட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இயக்குனர் அறிவழகன் திரைக்கதையால் பல இடங்களில் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்.
ஆதி சரியாக கதையை தேர்வு செய்வதில் வல்லவராக இருந்தாலும் நடிப்பில் பல இடங்களில் கோட்டை விடுகிறது அபத்தம். லட்சுமிமேனன் எப்போதும் போல தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார்..
மாற்றுத்திறனாளி குழந்தைகளை படத்திற்கு கொண்டு வந்து அவர்கள் மூலம் படத்திற்கு வலு சேர்க்க நினைத்த இயக்குனர் இன்னும் 80ஸ் காலத்தில் இருப்பது தான் அதிர்ச்சி. பல இடங்களில் வலிந்து தெரிவிக்கப்பட்டது போலவே அந்த காட்சிகள் இருக்கிறது.
இசையில் இயக்குனர் தமன் சில இடங்களில் தன்னுடைய பலத்தை கொடுத்தாலும் பல இடங்களில் சப்தம் என்ற பெயருக்கு ஏற்ப ஓவர் இரைச்சலை கொடுத்து ரசிகர்களுக்கு காது வலியை தான் ஏற்படுத்தி விட்டார். இதுவும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.