படம் ஃபுல்லா நெஞ்சை நக்கியே சாகடிக்கிறாங்க... மாமனைக் கிழித்த புளூசட்டைமாறன்

பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி நடித்த மாமன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் எப்படி இருக்குன்னு பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான புளூசட்டைமாறன் சொல்றார். வாங்க பார்க்கலாம்.
சூரி கதை எழுதி நடித்துள்ள படம் மாமன். இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன். படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர். அக்கா மேல சூரி ரொம்ப பாசமா இருக்காரு. அக்காவுக்கு 10 வருஷம் கழிச்சி ஒரு குழந்தை பிறக்குது. அந்தக் குழந்தை மேலயும் சூரி ரொம்ப பாசமா இருக்காரு.
குழந்தைக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் செய்றாரு. அதுவரைக்கும் படம் நல்லா தான் போகுது. படத்துல ஆரம்பத்துலயே நாலஞ்சு காட்சி நெஞ்சை நக்குற மாதிரி வச்சிருக்காங்க. ஒரு கட்டத்தில சூரிக்கு லவ் மேரேஜ் நடக்குது.

பர்ஸ்ட் நைட்டுக்கும் குழந்தை வருவேன்னு அடம்பிடிக்குது. சரி. குழந்தை ஆசைப்படு தேன்னு பர்ஸ்ட் நைட்டுலயும் படுக்க வச்சிடுறாங்க. ஏன்டா குழந்தை என்ன கேட்டாலும் கொடுத்துருவீங்களா? அப்படித்தான் வளர்ப்பீங்களா? கஞ்சா 2 பொட்டலம் கேட்டா சிகரெட்டுக்குள்ள அடைச்சி வச்சிக் கொடுப்பீங்களா? என்று கலாய்த்துள்ளார் புளூசட்டை மாறன்.
குடும்பத்துல புருஷனும், பொண்டாட்டியும் சண்டை போட்டு டைவர்ஸ் வரைக்கும் வந்து நடுரோட்டுல நிக்கிறாங்க. அங்கே பார்த்தா குழந்தை ஆசைப்பட்டான்கறதுக்காக பேசிட்டு இருக்காங்க. ஹனிமூனுக்கும் நானும் வருவேன்னு குழந்தை அடம்பிடிக்குது. அங்க இருந்து பிரச்சனை ஆரம்பிக்குது. அடுத்து என்ன நடக்குதுங்கறதுதான் கதை.
படத்துல ஆரம்பத்துல தான் இப்படி நெஞ்சை நக்குற சீனா இருக்குன்னு பார்த்தா, படம் முழுக்க நாங்க நெஞ்சை நக்குறோம் பாருன்னு 65 சீன்லயும் வச்சிருக்காங்க. இதுல வேற ராஜ்கிரணை உள்ளே கொண்டு வந்துருக்காங்க. அவருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னே தெரியல. அவரு போர்ஷனை அப்படியே தூக்கிட்டா கூட படத்துக்கு ஒண்ணும் ஆகாது.
அவரை ஒருபக்கம் கொண்டு வந்து நெஞ்சை நக்கி சாகடிச்சிட்டாங்க. இதுக்கெல்லாம் ஒரு படி மேல போயி உயிரோட இருக்குற சூரி போட்டோக்கு மாலையைப் போட்டு அங்க ஒரு வேலையைப் பார்த்தாங்க பாருங்க. அப்பாடா தாங்க முடியாது. இப்பல்லாம் என்ன படம் எடுக்குறாங்க? ஒரே வெட்டு குத்து ரத்தம். துப்பாக்கி, போதை மருந்து. படமா எடுக்குறாங்க?
நல்ல குடும்பப் பாங்கான படம் எடுக்குறாங்களா? மாமன் மச்சான் உறவு? அண்ணன் தம்பி உறவு, அக்கா தங்கச்சி உறவுன்னு எடுக்குறாங்க. எவனாவது ஒரு குடும்பப்பாங்கான படம் எடுக்கறாங்களா? நாங்க எடுக்குறோம் பாருன்னு மாமன் மருமகன் உறவு பத்தின படம்னு சொல்லிட்டு பிள்ளையை வளர்க்கத் தெரியாம வளர்த்து அது தேவையில்லாத வேலையை எல்லாம் பார்க்குது. வளவளவளன்னு கதையை வளர்த்து வச்சிருக்காங்க. இவங்களுக்கு பிள்ளையையும் வளர்க்கத் தெரியல. கதையையும் வளர்க்கத் தெரியல என்கிறார் புளூசட்டை மாறன்.