இனி காதல் மட்டும்தான்!..'ரெட்ரோ' லுக்கில் மாஸ் காட்டும் சூர்யா.. டைட்டில் டீசர் எப்படி இருக்கு?..

by Ramya |   ( Updated:2024-12-25 06:54:36  )
retro
X

retro

சூர்யா 44: கங்குவா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா கமிட்டான திரைப்படம் சூர்யா 44. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் நம்பி இருக்கிறார்கள். அதற்கு காரணம் கங்குவா திரைப்படத்தின் தோல்விதான். சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா.

மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் படம் படுதோல்வியை சந்தித்தது. பான் இந்திய திரைப்படமாக உருவான இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள்.


ஆனால் படம் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்ததால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தை நடித்த கையோடு நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் ஆக்ஷன் படமாக இல்லாமல் காதல் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கிறிஸ்மஸ் பண்டிகையான இன்று டைட்டில் டீசர் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி படக்குழுவினர் தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். சூர்யாவின் 44வது படத்துக்கு ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் நிச்சயம் ஒரு பீரியட் படமாக தான் இருக்கும் என்று உறுதியாகிவிட்டது. அதேபோல் படத்தின் டைட்டில் டீசரில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் லுக் மற்றும் அவர்கள் பேசும் வசனங்கள் அனைத்துமே 90ஸ் படம் என்பது போல பிம்பத்தை உருவாக்கி இருக்கின்றது. மேலும் நடிகர் சூர்யா இந்த டைட்டில் டீசரில் பூஜா ஹெக்டேவிடம் அடிதடி விட்டு விடுகிறேன், அப்பாவுடன் சேர்ந்து அடிதடி தொழிலை செய்ய மாட்டேன்.

இனி காதல் மட்டும்தான், பரிசுத்த காதல் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று பேசும் வசனங்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. இதிலிருந்து படத்தின் கதை என்ன என்பது ஓரளவுக்கு தெரிய வந்திருக்கின்றது. அதாவது தனது காதலிக்காக அடிதடி எல்லாம் வேண்டாம் என்று விட்டுவிட்டு காதலியை திருமணம் செய்து கொண்டு வாழ நினைக்கின்றார் சூர்யா. ஆனால் அவரை ஒதுங்க விடாமல் சிலர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார்கள்.

அதிலிருந்து மீண்டு எப்படி தனது காதலியை கரம் பிடித்து நிம்மதியான வாழ்க்கையை வாழப் போகிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாக இருக்கும் என்பது தெரிய வருகின்றது. மேலும் இந்த திரைப்படம் நிச்சயம் காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கின்றது என்பது இந்த டீசர் மூலம் உறுதியாகி இருக்கின்றது.


எனவே ரசிகர்களும் இந்த கதைக்கு ஏற்றார் போல் டியூனாகி இப்படத்தை பார்ப்பார்கள். எது எப்படியோ இந்த திரைப்படம் நிச்சயம் சூர்யாவுக்கு ஒரு ஹிட் திரைப்படமாக அமைய வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா இரண்டுமே படு தோல்வியை சந்தித்த நிலையில் நிச்சயம் ரெட்ரோ திரைப்படம் சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்காது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் முதன் முறையாக கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். அதிலும் சூர்யாவை வைத்து படத்தை இயக்கி இருக்கின்றார் என்பதால் இப்படம் நிச்சயம் சிறப்பாக வந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story