கேவலமான படம் பார்க்க ஆசையா... ஸ்வீட்ஹார்ட் பாருங்க... வறுத்தெடுத்த புளூசட்டை மாறன்

by Sankaran |
sweetheart, blue satta
X

ஸ்வீட் ஹார்ட் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத் யுவன் சங்கர் ராஜா தயாரிச்சி இசை அமைச்ச இந்தப் படத்துல ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தோட விமர்சனத்தை புளூசட்டை மாறன் இப்படி சொல்கிறார்.

ஹீரோவையும், அவங்க அப்பாவையும் தவிக்க விட்டுட்டு அவங்க அம்மா வேறொருத்தரோடு போயிடறாங்க. இதனால ஹீரோவுக்கு திருமண பந்தத்துல நம்பிக்கையே இல்லாமப் போயிடுது. ஒரு கட்டத்துல ஹீரோயினை சந்திக்கிறாரு.

நல்லா பழகுறாரு. ஹீரோயின் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றாங்க. ஹீரோ தட்டிக் கழிக்கிறாரு. அப்புறம் ஹீரோயின் கல்யாணத்துக்கு ரொம்ப கட்டாயப்படுத்தும்போது இவங்க காதல் பிரேக்கப் ஆகுது. ஒரு கட்டத்துல ஹீரோயின் கர்ப்பம் ஆகிடுறாரு. அப்புறம் என்ன நடக்குறதுங்கறதுதான் கதை.

ரொமான்டிக், காமெடி டிராமாவாகப் படம் போகுது. எந்தப் படத்தைப் பார்த்தாலும் எப்ப காதல்ல ஒண்ணு சேருவாங்கன்னு நமக்குத் தோணும். ஆனா இந்தப் படத்தைப் பார்த்தா நமக்கு எதுவுமே தோண மாட்டேங்குது. படம் நம்மைக் கண்டுக்காம அதுபாட்டுல ஓடிக்கிட்டு இருக்கு. நாம நம்ம பாட்டுக்கு படத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கோம்.

இந்தப் படத்துல நான்லீனியர்ல கதையை சொல்றேன்னுட்டு எது பிளாஷ்பேக்குன்னு தெரியாமலேயே குழப்பி வச்சிருக்காங்க. இவ்ளோதான் கதை. அதுக்கு அப்புறம் நீங்க தியேட்டரை விட்டு எழுந்து 10 நிமிஷம் கழிச்சி வந்தாலும் 20 நிமிஷம் கழிச்சி வந்தாலும் சரி. படத்தோட கதை அங்கேயே தான் நிக்கும். வேற எங்கயும் போகாது. லொகேஷனும் ஒரே இடம்தான். கேமராவும் நகராது.

பொதுவாக கர்ப்பமா இருக்குறாங்களான்னு பார்க்க யூரின் டெஸ்ட் எடுப்பாங்க. அதைக் காட்டுறதுக்கு என்னமோ ஹாலிவுட் லெவல்ல எடுத்து வச்சிருக்காங்க. அப்போ ஒரு நாட்டுல இருந்து இன்னொரு நாட்டுக்குப் போய் ராணுவ ரகசியங்களைத் திருடிட்டு வருவாங்க. அந்த மாதிரி எடுத்துருக்காங்க. சகிக்கல.


மாடர்ன் லவ், குழந்தை, அப்புறம் கல்யாண பந்தம்னு தெளிவா காட்டுவாங்கன்னு பார்த்தா மாத்தி மாத்தி சண்டை போட்டுக்குறாங்க. உன் குடும்பம் மட்டுமா மொள்ளமாரி குடும்பம்னு சொல்றாங்க. அந்தளவுக்கு வடிவேலு ஒரு படத்துல திட்டுவாரு. 'அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன். எங்க குடும்பத்தை அவன் ரொம்ப கேவலமா பேசுவான். இதை நாங்க ஜாலியாவே எடுத்துக்குவோம்'னு சொல்வாரு. அந்தமாதிரி படத்தை எடுத்துருக்காங்க. எவ்வளவு கேவலமா எடுத்து வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்னா இந்தப் படத்தைப் போயி பாருங்க என்கிறார் புளூசட்டை மாறன்.

Next Story