Thalaivan Thalaivi: பாண்டிராஜ்-விஜய் சேதுபதி காம்போ ஜெயித்ததா? தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு?

பசங்க படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். அவர் நடித்த தலைவன் தலைவி படத்தை இயக்குனர் பாண்டிராஜ் அருமையாக இயக்கியுள்ளார். இன்று வெளியான இந்தப் படம் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. வாங்க படத்தோட விமர்சனத்தைப் பற்றிப் பார்ப்போம்.
விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் காதலித்து கல்யாணம் செய்றாங்க. கல்யாணத்துக்கு அப்புறமும் தீவிரமாகக் காதலிக்கிறாங்க. ஒரு கட்டத்துல இருவரும் பிரிய நேரிடுகிறது. விஜய்சேதுபதி தன் மனைவியை விட்டுக் கொடுக்கக்கூடாதுன்னு மீண்டும் அவருடன் சேர வருகிறார். ஆனால் நித்யா மேனன் அடித்துத் துரத்துகிறார்.
ஒரு கட்டத்துல நித்யா மேனனுக்கும், விஜய் சேதுபதியின் அம்மாவுக்கும் கடுமையான பிரச்சனை வருகிறது. அம்மாவையும் விட முடியல. நித்யா மேனனையும் விட முடியல. விஜய் சேதுபதி இருவருக்கும் இடையில் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. கடைசியில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திலும் தன்னோட நடிப்பை மெருகேற்றிக்கிட்டுப் போறாரு. இந்தப் படத்திலும் அருமையான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார். விஜய் சேதுபதியின் படம் என்றாலே யதார்த்தம் தான். அவர் நடிப்பது மாதிரியே இருக்காது.
அழகாக அந்தக் கேரக்டராகவே வாழ்ந்து காட்டி இருப்பார். இந்தப் படத்திலும் நித்யா மேனனுடன் ஊடல், கூடல் என்று பல்வேறு விஷயங்களை அற்புதமாக பண்ணி இருக்கிறார். அந்த வகையில் இந்தப் படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்துதான்.
நித்யா மேனன் வழக்கம்போல பேய் மாதிரி நடிச்சிருக்காங்க. கேரக்டராகவே வாழ்ந்துருக்காங்க. யோகிபாபு, காளி வெங்கட், சென்றாயன் ஆகியோர் வழக்கம்போல நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் மியூசிக் கலக்கல். சுகுமாரின் ஒளிப்பதிவு அழகோ அழகு.
பிரதீப்பின் எடிட் அட்டகாசத்தின் உச்சம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பசங்க பாண்டிராஜின் இயக்கத்தில் படம் தரமாக உள்ளது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். 5க்கு 3.5 மார்க்.