விடாமுயற்சி மொக்கையா? காவாலிப்பயலா காட்டுறாங்களா? இப்படி ஓட்டிட்டாரே ப்ளூசட்டை!

by Sankaran |   ( Updated:2025-02-07 03:21:47  )
vidamuyarchi
X

மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜீத், திரிஷா, அர்ஜூன், ஆரவ் நடித்த படம் விடாமுயற்சி. அனிருத் இசை அமைத்துள்ளார். இது நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தின் விமர்சனத்தை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் சொல்கிறார். என்னன்னு பாருங்க.

கல்யாண வாழ்க்கையில கசப்பு: 1997ல் வெளியான பிரேக் டவுன் படத்தின் கதை இதுன்னு சொல்றாங்க. படம் அதன் சாயல்ல தான் இருக்கு. இது ஏறக்குறைய லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ் கதைதான். விடாமுயற்சி கதையில ஹீரோ, ஹீரோயினைக் காட்டுறாங்க. 12 வருட கல்யாண வாழ்க்கையில கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து ஆகி பிரிஞ்சிடலாம். அப்படிங்கற முடிவுக்கு வந்துடறாங்க.

கதை: ஹீரோ எவ்வளவோ பேசுறாரு. ஆனா ஹீரோயின் ஒத்து வரல. கடைசியில நானே கொண்டு போய் உங்க அம்மா வீட்டுல விடுறேன்னு சொல்றாரு. அப்புறம் படத்தின் கதை பிரேக் டவுனுக்குப் போகிறது. அந்தப் படம் மாதிரி ஹீரோயினைக் கடத்துறாங்க. செகண்ட் ஆப்ல ஹீரோயினைக் கண்டுபிடிப்பாரா? இருவரும் சேர்வார்களா என்பதுதான் கதை. இதுல எல்லாம் நமக்குக் குழப்பமே இல்லை. தமிழ்சினிமாவைப் பொருத்தவரைக்கும் ஹீரோவும், ஹீரோயினும் சேராமலா போவாங்க. ஆனா எப்படி அவங்க பிரில்லியண்டா கண்டுபிடிச்சாருன்னு இருக்கணும்.

எதுக்கு பிளாஷ்பேக்?: ஆனா அப்படி இல்லாம தேவையில்லாத மொக்கை மொக்கை சீனா வச்சி, செகண்ட் ஆப்ல கொடுமை பண்ணிட்டாங்க. குறிப்பாக வில்லனுக்கும், வில்லிக்கும் எதுக்கு பிளாஷ்பேக்? அப்புறம் அவங்களை லூசுங்கறாங்க. ஆனா இவங்க அவங்களை விட பிரில்லியண்டா இருக்காங்க. அப்புறம் கடத்திக் கொண்டு போயி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி விக்கிறாங்களாம். ஏன்டா பிளாஸ்டிக் சர்ஜரி பண்றதா இருந்தா அதுவே நல்ல தொழில்தானே. எதுக்கு கடத்திக் கொண்டு போய் விற்கணும்?


எதுக்குன்னே தெரியல?: தேவையில்லாம தாத்தா பாட்டி சண்டை வருது. முதல்லயே ஹீரோ, ஹீரோயினைக் காட்டுறாங்க. அப்புறம் 7 வருஷத்துக்கு முன்பு, 12 வருஷத்துக்கு முன்புன்னு காட்டுறாங்க. அது எதுக்குன்னே தெரியல. அப்போ அஜீத்தை இளமையா காட்டுறதுக்காக எடுத்துருக்கலாம். அவரைப் பொருத்த வரை கோட் சூட் போட்டு ஸ்டைலா நடந்து வந்தா ரசிகர்களுக்குப் பிடிக்கும். அந்த மாதிரியான சீன் கூட படத்துல இல்ல.

அஞ்சாறு கெட்டப்ல வர்றாரு. ஒரு கெட்டப் தான் ரசிக்கும்படியா இருக்கு. இந்தப் படத்தை எதுக்கு அஜர்பைஜான்ல எடுத்தாங்கன்னு தெரியல. அங்க உள்ள ஆர்டிஸ்ட் எல்லாம் பேக் ரவுண்டு ஆர்டிஸ்டாத் தான் இருக்கான். மெயின் ஆர்டிஸ்டு எல்லாம் தமிழ்நாட்டுக்காரங்க தான்.

அஜர்பைஜான் எதுக்கு?: இதை ஒரு மலைக்காட்டுல எடுத்துருக்கலாமே. இந்தப் படத்துல என்ன எடுத்துருக்காங்க. அஜர்பைஜான்ல 100 கிமீ. தூரத்துக்கு டெலிபோன் சிக்னலே கிடையாது. அங்கே பேங்க், போலீஸ் ஸ்டேஷன்னு எதைக் காட்டுனாலும் ஒருவன் தான் இருக்கான். படத்துலயே நாலு பேரைத் தான் அஜர்பைஜான்னு காட்டுறான். அவனுகளே காவாலிப்பயல்களா இருக்கான். இப்படி எல்லாம் காட்டுனா எப்படி அங்கே நமக்குப் போகத் தோணும்?

உள்தாழ்ப்பா போட்டு மூடிட்டாங்க: போனா கிட்னியை எடுத்துருவாங்களோன்னு பயமாத் தான் இருக்கும். இந்தப் படத்துக் கதையை நான் தேர்ந்தெடுக்கல. அஜீத் சார்தான் தேர்ந்தெடுத்தாருன்னு டைரக்டர் முன்ஜாமீன் வாங்கிட்டு ஓடப்பார்த்தாரு. இந்தப் படத்துக்கு முதல் பாதி நல்லா இருந்தது. செகண்ட் ஆப் கொஞ்சம் பிரிலியண்டா எடுத்துருக்கலாம்.

ஆனா தமிழ்சினிமாவின் டெம்ப்ளேட் படி முதல்ல சின்ன வில்லன். அப்புறம் பெரிய வில்லன். கடைசியில ரொம்ப பெரிய வில்லன்னு அடிக்கிறாரு. இவங்களே கொஞ்சம் தட்டுனா திறக்குற கதவை உள்தாழ்ப்பா போட்டு மூடிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story